››› முன்பக்கம்    

+ பெரிதாக்க | - சிறிதாக்க  பிரசுரிப்பு | உங்கள் கருத்து

வடக்கு மாகாணத்தில் வெள்ளஅனர்த்தத்தின் பின்னரான நிவாரண பணிகள் கடற்படையினரால் தொடர்ந்தும் முன்னெடுப்பு

வடக்கு மாகாணத்தில் வெள்ளஅனர்த்தத்தின் பின்னரான நிவாரண பணிகள் கடற்படையினரால் தொடர்ந்தும் முன்னெடுப்பு

[2018/12/28]

இலங்கை கடற்படை அண்மையில் நாட்டில் நிலவிய சீரற்ற வானிலை காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில் 15 நிவாரண குழுக்களை ஈடுத்தியுள்ளது. இக்குழுக்கள் முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்குவதில் தீவிரமாக செயற்பட்டுவருவதாக கடற்படை தகவல்கள் தெரிவிக்கின்றன.

வெள்ளஅனர்த்தத்தின் பின்னரான மீட்பு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு பிரதான அடிப்படை தேவையான சுத்தமான குடிநீரை வழங்குவதற்கான உதவிகளை கடற்படை வீரர்கள் முன்னெடுத்துள்ளனர். இதன்பிரகாரம் தொண்டமானாறு, மாங்குளம் மற்றும் கோட்டாடி ஆகிய பகுதிகளில் வெள்ளநீர் கலந்த கிணறுகளை துப்பரவு செய்யும் பணிகளில் கடற்படை நிவாரண அணியினர் ஈடுபட்டுள்ளனர்.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு சுத்தமான குடிநீரை பெறுவதற்கான வசதிகளை மேற்கொள்ளும் வகையில் கிணறுகளை துப்பரவு செய்யும் பணிகளில் ஈடுபடும் அதேவேளையில், கடற்படையினர் சுமார் 1000 லீட்டர் சுத்தமான குடிநீரை இம்மக்களுக்கு வழங்கியுள்ளனர். மேலும், எடுத்துச்செல்லக்கூடிய சமையலறைகள், சமையல் உபகரணங்கள், அவன்ஸ் போன்ற பல்வேறு நிவாரண உதவிகளை செய்வதுடன், வடக்கு மாகாணத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் நிவாரண நடவடிக்கைகளையும் தொடர்ந்தும் முன்னெடுத்து வருகின்றனர்.



செய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது

© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்

உங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்