››› முன்பக்கம்    

+ பெரிதாக்க | - சிறிதாக்க  பிரசுரிப்பு | உங்கள் கருத்து

இராணுவத்தினரால் மட்டக்களப்பில் மேலும் காணிகள் விடுவிப்பு

இராணுவத்தினரால் மட்டக்களப்பில் மேலும் காணிகள் விடுவிப்பு
[2018/12/29]

மட்டக்களப்பு மாவட்டத்தில் இராணுவத்தின் வசமிருந்த சுமார் 8.5 ஏக்கர் பரப்பு கொண்ட நான்கு காணி நிலப்பரப்புக்களை அண்மையில் (டிசம்பர், 27) உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டன.

குறித்த காணிகளை கிழக்கு பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் அநுர ஜயசேகர அவர்கள் கிழக்கு மாகாண ஆளுனர் திரு ரோஹித போகல்லாகம, கிழக்கு மாகாண பிரதம செயலாளர் திரு டீ.எம் சரத் அபேகுணவர்தன, மட்டக்களப்பு மாவட்ட உதவி செயலாளர் திருமதி சிறிகாந் ஆகியோரிடத்தில் கையளித்துள்ளார்.

இதன்போது, இராணுவ உயரதிகாரிகளான 23 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி பிரிகேடியர் கபில உதலுபொல, கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் பதவி நிலை பிரதானி பிரிகேடியர் சாந்த ஹேவாவிதாரன மற்றும் 231 ஆவது படைத் தலைமையகத்தின் கட்டளை அதிகாரி கேர்ணல் மிஹிந்து பெரேரா ஆகியோர் இணைந்து இருந்தனர்.

மன்முனைபத்து பிரதேச செயலகத்திற்குரிய கிரன்குளம் பிரதேசத்தில் 2.25 ஏக்கர் காணிகளும், மன்முனை தெற்கு எருவில்பற்று பிரதேச செயலகத்திற்குரிய பிரதேசத்திலுள்ள ஒந்தாட்சிமடம் பிரதேசத்தில் 0.5 நிலப் பரப்பும், மன்முனை தெற்கு பிரதேச செயலகத்திற்குரிய கொக்கட்டிச்சோலை போரதீவு பிரதேசத்தில் இருந்து 0.75 நிலப் பரப்பும், தொனித்தமடு கோரளை பற்று தெற்கு பிரதேச செயலகத்திற்குரிய பகுதியிலிருந்து 5 ஏக்கர் காணிகளும் விடுவிக்கப்பட்டன.

மேலும் அம்பாறை மாவட்டத்தில் இருந்தும் அதிகமான காணிகளை உரிமையாளர்களுக்கு எதிர்வரும் தினங்களில் விடுவிக்க உள்ளதுடன், மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள காணிகள் இப்போது விடுவிப்பது போன்று திருகோணமலை மாவட்டத்திலுள்ள அரச மற்றும் தனியார் காணிகளை மிக விரைவில் விடுவிப்பதற்கான நடவடிக்கைகளை கிழக்கு பாதுகாப்பு படை விரைவில் மேற்கொள்வர் என்பதாகவும் கிழக்கு பாதுகாப்பு படைத் தளபதி தெரிவித்தார்.



செய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது

© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்

உங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்