››› முன்பக்கம்    

+ பெரிதாக்க | - சிறிதாக்க  பிரசுரிப்பு | உங்கள் கருத்து

விவசாய நடவடிக்கைகளுக்காக இராணுவம் பய்படுத்திய அரச காணிகள் ஜனாதிபதி அவர்களின் பணிப்புரையின் கீழ் விடுவிப்பு

விவசாய நடவடிக்கைகளுக்காக இராணுவம் பய்படுத்திய அரச காணிகள் ஜனாதிபதி அவர்களின் பணிப்புரையின் கீழ் விடுவிப்பு

[2018/12/30]

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் அரச மற்றும் தனியார் காணிகளை விடுவிக்கும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வரும் அதேவேளை, அதிமேதகு ஜனாதிபதி அவர்களின் பணிப்புரையின் கீழ் இராணுவ விவசாய நடவடிக்கைகளுக்காக பய்படுத்திய சுமார் 1099 ஏக்கர் அரச காணிகளை மிக குறுகிய காலப்பகுதிக்குள் விடுவிப்பதற்கான நடவடிக்கைள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதனடிப்படையில். கிளிநொச்சி மாவட்ட பூநகரி பிரதேச செயலக ஜயம்பதி கிராம சேவகர் பிரிவின் வனப்பதுகாப்பு திணைக்களத்திற்கு உரித்தான சுமார் 479 ஏக்கர் காணிகளும், முல்லைத்தீவு மாவட்ட புதுக்குடியிருப்பு பிரதேச செயலக உதயர்காட்டுக்குளம் கிராம சேவகர் பிரிவின் வனப்பதுகாப்பு திணைக்களத்திற்கு உரித்தான சுமார் 120 ஏக்கர் காணிகளும், மன்னார் மாவட்ட மாந்தை மேற்கு பிரதேச செயலக வெள்ளங்குளம் கிராம சேவகர் பிரிவின் வனப்பதுகாப்பு திணைக்களத்திற்கு உரித்தான சுமார் 500 ஏக்கர் காணிகளுமே மிக குறுகிய காலப்பகுதிக்குள் விடுவிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அதற்கமைய இக்காணிகள் 2019 ஆம் ஆண்டின் ஜனவரி இரண்டாம் வாரத்தில் கிளிநொச்சி, முல்லைத்தீவு மற்றும் மன்னார் மாவட்ட செயலாளர்களுக்கு குறித்த காணிகள் தொடர்பான ஆவணங்கள் வட மாகாண ஆளுநர் அவர்களின் தலைமையில் உத்தயோகபூர்வமாக வழங்கபடவுள்ளது.



செய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது

© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்

உங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்