››› முன்பக்கம்    

+ பெரிதாக்க | - சிறிதாக்க  பிரசுரிப்பு | உங்கள் கருத்து

'சயுரள' கடற்படைக் கப்பல் சர்வதேச பாதுகாப்பு கண்காட்சியில் பங்கேற்பு

'சயுரள' கடற்படைக் கப்பல் சர்வதேச பாதுகாப்பு கண்காட்சியில் பங்கேற்பு

[2019/02/20]

ஐக்கிய அரபு எமிரேட்ஸ் தலைநகர் அபுதாபியில் இடம்பெற்றுவரும் ஐடிஈஎக்ஸ் 2019 என அறியப்படும் சர்வதேச பாதுகாப்பு கண்காட்சி மற்றும் மாநாட்டில் பங்கேற்பதற்காக கடந்த சனிக்கிழமையன்று மினா ஸைத் துறைமுகத்தை சென்றடைந்தது. அண்மையில் பாகிஸ்தான் கராச்சி நகரில் இடம்பெற்ற பன்னாட்டு கடற்படை பயிற்சியான "அமன் 2019" இனை வெற்றிகரமாக நிறைவு செய்த பின்னர் குறித்த மாநாட்டில் பங்கேற்பதற்காக அங்கு சென்றுள்ளது.

இச் சர்வதேச பாதுகாப்பு கண்காட்சி, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அரசாங்கத்தின் கௌரவ ஷேய்க் கலீபா பின் செயேத் அல் நஹ்யான் அவர்கள் தலைமையில் கடந்த சனிக்கிழமை ஆரம்பமானது. இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை மத்திய கிழக்கு மற்றும் வட ஆப்பிரிக்கா பிராந்தியத்தில் இடம்பெற்றுவரும் சர்வதேச பாதுகாப்பு கண்காட்சி மற்றும் மாநாடானது பாதுகாப்பு துறையில் அதி நவீன தொழிநுட்பங்களை காட்சிப்படுத்தும் வகையில் இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.



செய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது

© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்

உங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்