››› முன்பக்கம்    

+ பெரிதாக்க | - சிறிதாக்க  பிரசுரிப்பு | உங்கள் கருத்து

யாழ்ப்பாணத்தில் மற்றுமொரு காணித்தொகுதி விடுவிப்பு

யாழ்ப்பாணத்தில் மற்றுமொரு காணித்தொகுதி விடுவிப்பு

[2019/03/05]

இனங்களுக்கிடையில் நல்லென்னத்தை மேலும் வலுப்படுத்தும் வகையில் இலங்கை இராணுவத்தினரால் பயன்படுத்தப்பட்ட மயிலடி வடக்கு மற்றும் பலாலி கிழக்கு பகுதிகளில் உள்ள சுமார் 19.72 ஏக்கர் காணிகள் சிவராத்திரி தினத்தை முன்னிட்டு (மார்ச், 4) விடுவிக்கப்பட்டது. இந்நிகழ்வு தெல்லிப்பளை பிரதேச செயலாகத்தில் இடம்பெற்றது.

இதன்போது, அரச அதிகாரிகள் மற்றும் காணி உரிமையாளர்கள் முன்னிலையில் காணி தொடர்பான உத்தியோகபூர்வ ஆவணங்கள் யாழ்ப்பாண பிரதேச செயலாளரிடம் கையளிக்கப்பட்டன.

இதேவேளை, இலங்கை இராணுவம் வடமாகாணத்தில் கராச்சி, கண்டவெளி, புதுக்குடியிருப்பு, மற்றும் துணுக்கை ஆகிய பிரதேசங்களில் இராணுவத்தினர் பயன்படுத்திய சுமார் 45.28 ஏக்கர் காணிகளை கடந்த வருடம் (2018) டிசம்பர் மாதம் விடுவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

 



செய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது

© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்

உங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்