முக்கிய செய்திகள் ››

விசேட செயல்பாடுகள் அறை இல - 0112322485

››› முன்பக்கம்    

+ பெரிதாக்க | - சிறிதாக்க  பிரசுரிப்பு | உங்கள் கருத்து

குறைந்த வருமானம் பெரும் குடும்பங்களுக்கு இராணுவத்தினரின் உதவியுடன் சுகாதார வசதிகள்

குறைந்த வருமானம் பெரும் குடும்பங்களுக்கு இராணுவத்தினரின் உதவியுடன் சுகாதார வசதிகள்

[2019/03/15]

வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் வசிக்கும் மக்களின் வாழ்க்கை தரத்தினை உயர்த்தும் வகையில் இலங்கை இராணுவத்தினர் பல்வேறு சமூக நலன்புரித் திட்டங்களை முன்னெடுத்துவருகின்றனர். இதற்கமைய குறைந்த வருமானம் பெரும் குடும்பங்களுக்கு தேவையான புதிய மலசலகூட வசதிகளை ஏற்படுத்தி கொடுத்துள்ளனர்.

அண்மையில், இராணுவத்தினரால் குறைந்த வருமானம் பெரும் பத்து குடும்பங்களுக்கு புதிய மலசலகூடங்கள் நிர்மாணித்து கொடுக்கப்பட்டன.

இந்நிகழ்வு, யாழ் பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாரச்சி அவர்களின் தலைமையின்கீழ் சாவகச்சேரி திருவல்லூவர் சமூக நிலையத்தில் இடம்பெற்றது.

இதன்போது, பயனாளிகள் குடும்பங்களுக்கு சுகாதாரப்பொதிகள் மற்றும் சுத்தம் செய்வதற்கான தூள் என்பன விநியோகிக்கப்பட்டன.

மேலும், இராணுவத்தினரால் கடந்த ஒரு வருடத்திற்குள், யாழ் பகுதியில் குறைந்த வருமானம் பெரும் குடும்பங்களுக்கு சுமார் 50 க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு புதிய மலசலகூட வசதிகள் ஏற்படுத்தி கொடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.செய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது

© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்

உங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்