››› முன்பக்கம்    

+ பெரிதாக்க | - சிறிதாக்க  பிரசுரிப்பு | உங்கள் கருத்து

கிழக்கில் மற்றுமொரு தொகுதி காணி விடுவிக்க நடவடிக்கை

கிழக்கில் மற்றுமொரு தொகுதி காணிகள் விடுவிக்கப்படவுள்ளது

[2019/03/19]

இலங்கை இராணுவத்தினரால் பயன்படுத்தப்பட்ட மற்றுமொரு தொகுதி காணி விடுவிக்கப்பட்டுள்ளது. குச்சவெளி, கல்முனை மற்றும் திருக்கோவில் பிரதேச செயலகங்களுக்குற்பட்ட தியயாய, பெரியநிலாவெளி மற்றும் திருக்கோவில் கிராம சேவகர் பிரிவுகளில் இலங்கை இராணுவத்தினரால் பாதுகாப்பு தேவைகளுக்காக பயன்படுத்தப்பட்டு வந்த 5.05 ஏக்கர் தனியார் காணிகள் எதிர் வரும் திங்கள்கிழமையன்று (மார்ச், 25)கையளிக்கப்படவுள்ளதாக இராணுவ தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதற்கேற்ப, தனியாருக்கான சொந்தமான 3.5ஏக்கர் காணியும் அரச நிறுவனங்களுக்கு சொந்தமான இதர காணிகளும் இவ்வாறு விடுவிக்கப்படவுள்ளன.

இதற்கான உத்தியோக பூர்வ ஆவணங்களை சமர்பிக்கும் நிகழ்வு அம்பாறை மாவட்ட செயலகத்தில் இடம்பெறவுள்ளது. இந்நிகழ்வில் சர்வ மத தலைவர்கள், ஆளுநர், சிரேஷ்ட அரச அதிகாரிகள், கிழக்கு பாதுகாப்புப் படைத் தளபதி, மற்றும் நில உரிமையாளர்கள் ஆகியோர் கலந்து கொள்ளவுள்ளனர்.



செய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது

© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்

உங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்