››› முன்பக்கம்    

+ பெரிதாக்க | - சிறிதாக்க  பிரசுரிப்பு | உங்கள் கருத்து

பாதுகாப்பு அமைச்சில் 'திரிபிடகபிவந்தனா' வாரத்தினை முன்னிட்டு பல சமய நிகழ்வுகள் ஏற்பாபடு

பாதுகாப்பு அமைச்சில் 'திரிபிடகபிவந்தனா' வாரத்தினை முன்னிட்டு பல சமய நிகழ்வுகள் ஏற்பாபடு

[2019/03/22]

உலக பாரம்பரிய மரபுரிமை சொத்தாக பெளத்தர்களின் புனித நூலான தேரவாத திரிபிடகம் அறிவிக்கப்பட்டுள்ளதை அடுத்து மார்ச் 16ம் திகதி முதல் 23ம் திகதி வரை 'திரிபிடகபிவந்தனா' வாரம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இப்பிரகடனம் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்களின் பணிப்புரைக்கமைய முன்னெடுக்கப்பட்டுள்ளது.

பெளத்தர்களின் புனித நூலான தேரவாத திரிபிடகம் மாத்தளை அளுவிகார விகாரையில் இடம்பெற்ற விஷேட வைபவத்தின் போது இலங்கையின் தேசிய மரபுரிமை சொத்தாக இவ்வாண்டு ஜனவரி மாதம் ஜனாதிபதி அவர்களினால் பிரகடப்படுத்தப்பட்டது.

'திரிபிடகபிவந்தனா' வாரத்தினை முன்னிட்டு நாடெங்கிலும் உள்ள அனைத்து அரசு நிறுவனங்களிலும் சமய நிகழ்வுகள் பல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

இதற்கமைவாக 'திரிபிடகபிவந்தனா' வாரத்தினை முன்னிட்டு பாதுகாப்பு அமைச்சிலும் பல சமய நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இந் நிகழ்வுகளில் 'தர்ம சொற்பொழிவுகள், தியான முறைமைகள் மற்றும் உறுதிமொழி என்பன உள்ளடங்குகின்றன. இந்நிகழ்வுகள் எதிர்வரும் வெள்ளிக்கிழமை அமைச்சினது வளாகத்தில் இடம்பெறவுள்ளதுடன் குறித்த நிகழ்வுகளில் அமைச்சில் பணிபுரியும் உத்தியோகத்தர்கள் பலர் கலந்துகொள்ளவுள்ளனர்.

'ஜனாதிபதி சந்தகம் யாத்ரா' புதன் கிழமையன்று இடம்பெறவுள்ளதாக ஜனாதிபதி செய்தி ஊடக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் ஜனாதிபதி செயலகம் மற்றும் அனைத்து ஆளுநர் அலுவலகங்களும் இணைந்து தானம் வழங்கும் நிகழ்வுகள் பலவற்றை முன்னெடுக்கின்றன. அத்துடன் அனைத்து அரச, அரச சார்பு மற்றும் தனியார்துறை நிறுவனங்களிலும் வீடுகள், வாகனங்கள் மற்றும் வீதிகள் அனைத்திலும் பௌத்த கொடியினை ஏற்றிவைக்குமாறு கோரப்பட்டுள்ளது.

'திரிபிடகபிவந்தனா'

 



செய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது

© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்

உங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்