››› முன்பக்கம்    

+ பெரிதாக்க | - சிறிதாக்க  பிரசுரிப்பு | உங்கள் கருத்து

குறிபார்த்து சுடுதல் போட்டியில் இலங்கை இராணுவம் பிரகாசிப்பு

குறிபார்த்து சுடுதல் போட்டியில் இலங்கை இராணுவம் பிரகாசிப்பு

[2019/04/12]

தேசிய குறிபார்த்து சுடுதல் விளையாட்டு அமையத்தினால் அண்மையில் இடம்பெற்ற குறிபார்த்து சுடுதல் போட்டியில் இலங்கை இராணுவம் அனைத்து போட்டிகளுக்குமான சம்பியன் விருதினை தனதாக்கியது. வெளிசரவில் உள்ள இலங்கை கடற்படையின் குறுந்தூர இலக்கு சூட்டு மைதானத்தில் இடம்பெற்ற இப்போட்டியில் இலங்கை இராணுவ வீரர்கள் 8 தங்கம், 6 வெள்ளி மற்றும் 2 வெண்கலப் பதக்கங்களை பெற்றுக்கொண்டதாக இராணுவ தகவல்கள் தெரிவிக்கின்றன.

இராணுவம், கடற்படை, விமானப்படை, பொலிஸார், பாடசாலை மற்றும் சிவில் கழகங்களைச் சேர்ந்த 186 துப்பாக்கி சூட்டாளர்கள் இந்த போட்டியில் கலந்து கொண்டனர். 10, 25 மற்றும் 50 மீற்றர் தூரங்களுக்கு இடையிலான பிரிவுகளாக பிரிக்கப்பட்டு இந்த போட்டிகள் இடம்பெற்றது.

மூன்று சாதனைகளுடன் இராணுவம் 8 தங்கம், 6 வெள்ளி மற்றும் 2 வெண்கலப் பதக்கங்களை வென்று ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றது. 1 தங்கம், 3 வெள்ளி மற்றும் 1 வெண்கலம் பதக்கங்களுடன் கடற்படை இரண்டாம் இடத்தினையும் விமானப்படை 5 வெண்கலப் பதக்கங்களை வென்று மூன்றாம் இடத்தினையும் பெற்றுக்கொண்டது.



செய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது

© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்

உங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்