››› முன்பக்கம்    

+ பெரிதாக்க | - சிறிதாக்க  பிரசுரிப்பு | உங்கள் கருத்து

பொதுமக்களின் பாதுகாப்பினை உறுதிப்படுத்த அனைத்து நடவடிக்கைகளும் முன்னெடுப்ப

பொதுமக்களின் பாதுகாப்பினை உறுதிப்படுத்த அனைத்து நடவடிக்கைகளும் முன்னெடுப்பு

[2019/05/12]

ஏப்ரல் 21 ம் திகதி உயிர்த்த ஞாயிறு தினத்தில் இடம்பெற்ற தற்கொலை குண்டுவெடிப்புகளில் ஈடுபட்ட பெரும்பாலான குற்றவாளிகள், பாதுகாப்பு படையினர், விஷேட அதிரடிப்படையினர், பொலிஸ் மற்றும் சிவில் பாதுகாப்பு படையினர் ஆகியோரினால் கைது செய்யப்பட்டதன் மூலம் நிலைமையை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர முடிந்ததாக பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் எஸ்எச்எஸ்.கோட்டேகொட (ஓய்வு) டப்டப்வீ ஆர்டப்பீ ஆர்எஸ்பி வீஎஸ்வீ யுஎஸ்பி அவர்கள் தெரிவித்தார். மேலும், அனைத்து பாடசாலைகள், மத வழிபாட்டு தளங்கள், சுற்றுலா தளங்கள், சுற்றுலா விடுதிகள் மற்றும் பொதுமக்கள் ஒன்றுகூடும் இடங்கள் என்பனவற்றின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக பாதுகாப்புப் படைகளும் பொலிஸாரும் தொடர்ந்து கடமையில் ஈடுபட்டுவருவதாக அவர் தெரிவித்தார். சமூக ஊடகங்கள் வாயிலாக பரவலாக போலியான செய்திகள் பரப்பபடுவதால் அது தொடர்பாக பொது மக்கள் அவதானமாக இருக்குமாறு அவர் வேண்டுகோள் விடுத்தார்.

இதன்போது கருத்து வெளியிட்ட பாதுகாப்பு படைகளின் பிரதம அதிகாரி அட்மிரல் ரவிந்திர விஜேகுணரட்ன அவர்கள், முப்படையினர், விஷேட அதிரடிப்படையினர், பொலிஸ் மற்றும் சிவில் பாதுகாப்பு படையினர் ஆகியோர் புலானாய்வு பிரிவினருடன் இணைந்து இந்த பயங்கரவாத குழுவினருக்கு எதிராக வெற்றிகரமாக செயற்பட்டுள்ளனர். இந்த தாக்குதலை மேற்கொண்ட பயங்கரவாதிகள் பலர் இறந்துவிட்டனர் அல்லது அவர்கள் பாதுகாப்பு அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டுள்ளனர். எனவே, பொதுமக்கள் தமது நாளாந்த கடமைகளை அச்சமின்றி முன்னெடுக்க முடியும். எதிர்காலத்தில் பொதுமக்களின் பாதுகாப்பை உத்தரவாதம் செய்வதற்கு பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்ந்துமுன்னெடுக்கப்பட்டுவருகின்றன என அவர் மேலும் தெரிவித்தார்.



செய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது

© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்

உங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்