››› முன்பக்கம்    

+ பெரிதாக்க | - சிறிதாக்க  பிரசுரிப்பு | உங்கள் கருத்து

பொது மக்களின் பாதுகாப்புக்காக பாதுகாப்பு படையினரால் அனைத்து நடவடிக்கைகளும் முன்னெடுப்பு

பொது மக்களின் பாதுகாப்புக்காக பாதுகாப்பு படையினரால் அனைத்து நடவடிக்கைகளும் முன்னெடுப்பு

[2019/05/14]

பொலிஸாருடன் இணைந்து பாதுகாப்பு படையினர் ஏப்ரல் 21ஆம் திகதியிலிருந்து கடந்த மூன்று வாரங்களாக நாட்டில் பயங்கரவாதத்தை ஒழிப்பதற்கான அதிகபட்ச நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர். பாதுகாப்பு படையினரால் பயங்கரவாதிகள் பலர் கொல்லப்பட்டு, ஏனையோர் கைது செய்யப்பட்டுள்ளனர். எனவே, பொதுமக்கள் தமது நாளாந்த கடமைகளை அச்சமின்றி முன்னெடுக்கும் படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். கடந்த வரம் நீர்கொழும்பிலும் மே மாதம் 12 ஆம் திகதி பிங்கிரிய, சிலாபத்திலும் இடம்பெற்ற சம்பவங்களால் சாதாரண பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு தடை ஏற்பட்டபோதும், நாட்டின் சட்டம் ஒழுங்கை பாதுகாக்கும் வகையில் மேலதிகமாக படையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

எனவே பொது மக்கள் வீணாக எவ்வித அச்சமும் கொள்ளளாமல் பொறுப்புடன் செயற்பட்டு பயங்கரவாதத்தை முற்றாக ஒழிக்க பாதுகாப்பு படையினருக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு கொள்ளுப்பிட்டி பாதுகாப்பு அமைச்சின் ஊடக மையத்தில் நேற்று மாலை (13) இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் கருத்து வெளியிட்ட பாதுகாப்பு படைகளின் பிரதம அதிகாரி அட்மிரல் ரவிந்திர விஜேகுணரட்ன அவர்கள் கேட்டுக்கொண்டார்.



செய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது

© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்

உங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்