››› முன்பக்கம்    

+ பெரிதாக்க | - சிறிதாக்க  பிரசுரிப்பு | உங்கள் கருத்து

சேவா வனிதா பிரிவின் புதிய தலைவி கடமைகளை பொறுப்பேற்பு

சேவா வனிதா பிரிவின் புதிய தலைவி கடமைகளை பொறுப்பேற்பு

[2019/05/14]

பாதுகாப்பு அமைச்சின் சேவா வனிதா பிரிவின் புதிய தலைவியாக திருமதி சோனியா கோட்டகொட அவர்கள் தமது கடமைகளை இன்று (மே,14) பொறுப்பேற்றுக்கொண்டார்.

பாதுகாப்பு அமைச்சில் இன்று இடம்பெற்ற இந்நிகழ்வில் நிதிப்பணிப்பாளர் திருமதி. ஏஏடிகே. அதிகாரி மற்றும் சேவா வனிதா பிரிவின் அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

பாதுகாப்பு அமைச்சின் சேவா வனிதா பிரிவானது படை வீரர்கள் மற்றும் அவர்களது குடும்பங்களின் சேமலாப நலன்களை முன்னெடுப்பதற்காக தோற்றுவிக்கப்பட்ட ஒரு அமைப்பாகும். இது பிரதானமாக வீடமைப்புக்கான நிதி உதவி வழங்குதல், படைவீரர்களின் குழந்தைகளுக்கான கல்வி உதவித்தொகைகளை வழங்குதல் மற்றும் அவசரகால மற்றும் பிற நலன்புரி நடவடிக்கைகளில் படைவீரர்களின் குடும்பங்களுக்கு நலன்புரி மற்றும் நிதி உதவிகளை வழங்கி வருகின்றது. அத்துடன் முப்படை மற்றும் சிவில் பாதுகாப்பு படைகளின் சேவா வனிதா பிரிவுகளுடன் இணைந்து செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றது.



செய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது

© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்

உங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்