››› முன்பக்கம்    

+ பெரிதாக்க | - சிறிதாக்க  பிரசுரிப்பு | உங்கள் கருத்து

காணொளி கிளிப் மற்றும் புகைப்பட பரவல்

காணொளி கிளிப் மற்றும் புகைப்பட பரவல்

[2019/05/15]

ஊடக அறிக்கை

துன்மோதர பகுதியில் ஒரு நாசகார குழுவினர் வன்முறை செயற்பாடுகளில் ஈடுபட்ட போது அங்கு இராணுவ சீருடைக்கு ஒத்த சீருடையினை அணிந்த ஒர் நபர் குறித்த வன்முறை செயற்பாடுகளை பார்பது போல் ஓர் காணொளியொன்று இலங்கை இராணுவத்தை ஈர்த்துள்ளது.

குறித்த இக் காணொளியை அவதானித்த இராணுவமானது இச் சம்பவத்துடன் தொடர்புடைய குறிப்பிட்ட சந்தேக நபர் இராணுவத்தில் சேவையாற்றும் படைவீரரா என்பதை இனங்கானும் முகமாக விசேட விசாரனையை முன்னெடுத்துள்ளது. மேலும் இச் சம்பவத்துடன் தொடர்புடைய நபரை இனம் கண்டு தகுந்த நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக இலங்கை இராணுவம் பொது மக்களிடம்; உதவியை நாடுகின்றது. இச் சம்பவத்துடன் தொடர்புடைய நபர் இராணுவ வீரரென உறுதிப்படுத்தப்படுமாயின் இராணுவத்தால் தகுந்த ஒழுக்காற்று நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

அதன் பிரகாரம், இச் சம்பவம் தொடர்பாக யாதாயினும் அறிந்திருப்பின் இராணுவ பொலிஸ் படையணியின் விசேட விசாரனை பிரிவிற்கு 011 2514280 எனும் தொலைபேசி எண்ணினுhடாக தெரிவிக்குமாறு பொது மக்களிடம் கேட்டுக்கொள்ளப்படுகின்றது.

நன்றி: army.lk



செய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது

© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்

உங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்