››› முன்பக்கம்    

+ பெரிதாக்க | - சிறிதாக்க  பிரசுரிப்பு | உங்கள் கருத்து

பதற்றமான சூழ்நிலையை கட்டுப்படுத்த காவல்துறையினர் அதிகபட்ச அதிகாரங்களை பயன்படுத்துவர்

பதற்றமான சூழ்நிலையை கட்டுப்படுத்த காவல்துறையினர் அதிகபட்ச அதிகாரங்களை பயன்படுத்துவர்

[2019/05/15]

மினுவங்கொட பகுதியில் நேற்று (மே, 13) இடம்பெற்ற பதற்றமான சூழ்நிலையை கட்டுப்படுத்த இலங்கை விமானப்படையினர் விரைந்து செயற்பட்டனர். இதற்காக பல்வேறு விமானப்படை முகாம்களில் இருந்தும் படையினர் இப்பகுதிக்கு அனுப்பிவைக்கப்பட்டனர். சட்டவிரோதமாக ஒன்றுகூடல் மற்றும் வன்முறைகளில் ஈடுபடுவோரை கட்டுப்படுத்துவதற்கு இரவு பகலாக இலங்கை விமானப்படையின் உலங்குவானூர்திகளை பயன்படுத்த இலங்கை விமானப்படை தளபதி அவர்கள் தீர்மானித்துள்ளதாகவும், மேலும், இவ் உலங்குவானூர்திகளை பயன்படுத்தி வான்வழியில் புகைப்படங்கள் எடுப்பதுடன், தேவையான பகுதிகளுக்கு விமானப்படையினரை தரையிறக்கி துரித நடவடிக்கை மேற்கொள்ள உள்ளதாகவும் விமானப்படை பேச்சாளர் குரூப் கெப்டன் கிஹான் செனவிரட்ன கொள்ளுப்பிட்டி, பாதுகாப்பு அமைச்சு ஊடக மையத்தில் நேற்று மாலை (மே, 14) நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் தெரிவித்தார்.

குறுகிய மனப்பான்மை கொண்ட சில குழுக்களால் மேற்கொள்ளப்பட்ட ரால் பொறுப்பற்ற செயல்களால் குருனாகல், நிகவெரட்டிய, மினுவங்கொட, வாரியபொல, குலியாபிடிட்டிய மற்றும் சிலாபம் ஆகிய பகுதிகளில் ஒரு பதற்றமான சூழ்நிலை உருவாகியுள்ளது. இது ஒரு மத அல்லது இனக்கலவரம் அல்ல என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இருந்தபோதும், இப்பகுதிகளில் பல் சேதங்கள் ஏற்பட்டுள்ளமை தெரியப்படுத்தப்பட்டுள்ளது. இதன்காரணமாக குறித்த பகுதிகள் உட்பட நாடலாவிய ரீதியில் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. இதன்பிறகு இவ்வாறான செயல்களில் தனிநபார் அல்லது குழுக்கள் ஈடுபட்டால் அதனை கட்டுப்படுத்த காவல்துறையினர் அதிகபட்ச அதிகாரங்களை பயன்படுத்துவர். இது தொடர்பாக நேற்று மாலை பொலிஸ் தலைமையகத்தினால் எழுத்துமூலமான கட்டளைகள் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகளுக்கு வினியோகிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ருவான் குணசேகர அவர்கள் செய்தியாளர் மாநாட்டில் தெரிவித்தார்.

பதற்ற சூழ்நிலைதொடர்பாக குறித்த பகுதிகளில் விசாரணைகள் இடம்பெற்றுவருகின்றன. மினுவங்கொடையில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பாக ஒன்பது சந்தேகநபர்கள் நேற்று இரவு (13) கைதுசெய்யப்பட்டுள்ளனர். இன்று காலை (14) இச்சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் ஐவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் மினுவங்கொட நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டு 29ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். சந்தேகநபர்கள் அனைவரும் அவசரகால சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளதுடன், குறித்த சந்தேகநபர்கள் குற்றவாளிகள் என அடையாளம் காணப்பட்டால் அவர்களுக்கு பத்து வருடம்வரை சிறைத்தண்டனை விதிக்கப்படலாம் என மேலும் அவர் தெரிவித்தார்.

வடமேல் மாகாணத்தில் ஊடரங்கு சட்டத்தை மீறி பதற்றமான சூழ்நிலையை ஏற்படுத்திய 60க்கும் அதிகமானோர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். கைது செய்த இவர்களில் ஹெட்டிப்பொல பிரதேசத்திலிருந்து ஒன்பது சந்தேக நபார்களும், குளியாபிடிய பிரதேசத்திலிருந்து பத்து சந்தேக நபார்களும் குறித்த பகுதிகளில் பதற்றமான சூழ்நிலையை ஏற்படுத்தி சொத்துக்களை சேதப்படுத்தியவர்கள் என அடையாளம்காணப்பட்ட அவர்களை உரிய நீதிமன்றம் 27ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டுள்ளது. பொலிஸ் பாதுகாப்பில் உள்ள ஏனையோர் இன்று உரிய நீதிமன்றங்களுக்கு முன்னிலைப்படுத்தப்படுவர். மேலும் போலி தகவல்கள் பரப்பும் நபார்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதற்காக பொலிஸ் தலைமையகத்தினால் விஷேட பிரிவு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இப்பிரிவானது சமூக வலைத்தளங்கள் ஊடாக போலியான தகவல்கள் பரவுவதை தடுப்பதற்காக முழு முயற்சியுடன் செயற்படுவார்கள். சமூக வலைத்தளங்கள் ஊடாக இவ்வாறு போலியான தகவல்களை பரப்பும் நபர்கள் குற்றவாளிகளாக கருதப்பட்டு அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். வடமேல் மாகாணத்தில் நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் வகையில் மேலதிக படையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். சமூக வலைத்தளங்கள் ஊடாக போலி தகவல்களை பரப்பிய மூன்று நபார்கள் மாத்தறை பகுதியில் கைது செய்யப்பட்டு அவர்கள் உரிய நீதிமன்ற உத்தரவின்பேரில் 27ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். இதேவேளை, விஷேட காவல்துறை பிரிவினர் பதற்ற சூழ்நிலையை ஏற்படுத்திய சந்தேகத்தின்பேரில் வரக்கபொலயில் வைத்து நாமல் குமார என்பவரையும், தெல்தெனியவில் வைத்து அமித் வீரசிங்க என்பவரையும் கைதுசெதுள்ளனர். லியனகே அபேரத்ன சுரேஷ் பிரியசாத் தானாகவே கொழும்பு குற்றப் பிரிவில் சரணடைந்துள்ளதாக பொலிஸ் அத்தியட்சகர் மேலும் தெரிவித்தார்.



செய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது

© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்

உங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்