››› முன்பக்கம்    

+ பெரிதாக்க | - சிறிதாக்க  பிரசுரிப்பு | உங்கள் கருத்து

சேவா வனிதா பிரிவின் புதிய தலைவி பாதுகாப்பு சேவைகள் கல்லூரிக்கு விஜயம்

சேவா வனிதா பிரிவின் புதிய தலைவி பாதுகாப்பு சேவைகள் கல்லூரிக்கு விஜயம்

[2019/06/03]

பாதுகாப்பு அமைச்சின் சேவா வனிதா பிரிவின் புதிய தலைவி திருமதி. சோனியா கோட்டேகொட அவர்கள் கொழும்பு பாதுகாப்பு சேவைகள் கல்லூரிக்கு இன்று (ஜூன், 03) விஜயம் ஒன்றினை மேற்கொண்டார். கடந்த மாதம் 27ஆம் திகதி புதிய தலைவியாக தமது கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்ட பின்னர் பாதுகாப்பு சேவைகள் கல்லூரிக்கு அவர் மேற்கொண்ட முதல் விஜயம் இதுவாகும்.

இங்கு விஜயம் மேற்கொண்ட திருமதி. கோட்டேகொட அவர்களை அதிபர் மற்றும் ஆசிரியர்கள் வரவேற்றனர். இப்பாடசாலை எதிர் நோக்கியுள்ள சிக்கல்கள் மற்றும் தேவைகளை அறிந்துகொள்ளும் நோக்கில் இங்கு விஜயம் மேற்கொண்ட அவர், கல்லூரி அதிகாரிகளுடன் கலந்துரையாடல்களையும் மேற்கொண்டார்.

 செய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது

© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்

உங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்