››› முன்பக்கம்    

+ பெரிதாக்க | - சிறிதாக்க  பிரசுரிப்பு | உங்கள் கருத்து

இலங்கை கப்பல் முகவர்கள் சங்கத்தின் (CASA) பிரதிநிதிகள் பாதுகாப்பு செயலாளருடன் சந்திப்பு

இலங்கை கப்பல் முகவர்கள் சங்கத்தின் (CASA) பிரதிநிதிகள் பாதுகாப்பு செயலாளருடன் சந்திப்பு

[2019/07/02]

இலங்கை கப்பல் முகவர்கள் சங்கத்தின் (CASA) பிரதிநிதிகள் குழு பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் எஸ்எச்எஸ்.கோட்டேகொட (ஓய்வு) டப்டப்வீ ஆர்டப்பீ ஆர்எஸ்பி வீஎஸ்வீ யுஎஸ்பி என்டிசி அவர்களை கடந்த வெள்ளிக்கிழமையன்று (ஜுன், 28) சந்தித்தனர்.

பாதுகாப்பு அமைச்சில் இடம்பெற்ற இச்சந்திப்பில், அனுமதி வழங்கும் செயல்முறையை விரைவுபடுத்துதல், துறைமுக உட்பிரவேசம் மற்றும் வெளியேறத்தின் போதான தாமதங்களைக் குறைத்தல் ஆகியவற்றுடன் இணைந்த உள்ளூர் கப்பல் முகவர்கள் எதிர்கொள்ளும் பல்வேறு பிரச்சினைகள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டன.

இலங்கை கப்பல் முகவர்கள் சங்க செயலாளர் நாயகம் திரு. ரல்ப் ஆனந்தப்பா அவர்களின் தலைமையிலான பிரதிநிதிகள் குழுவினர் தெரிவித்த பிரச்சினைகள் தொடர்பாக அமைதியாக செவிமெடுத்ததுடன் அவற்றினை தீர்ப்பதற்கான வழிமுறைகள் பெற்றுத்தருவதாகவும் உறுதியளித்தார்.

இந்நிகழ்வில் பாதுகாப்பு அமைச்சின் சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் கடமை நிறைவேற்று ஹார்பர் மாஸ்டர் கெப்டன் கேஎம் நிர்மல் பி சில்வா ஆகியோர் கலந்துகொண்டனர்.

 



செய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது

© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்

உங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்