››› முன்பக்கம்    

+ பெரிதாக்க | - சிறிதாக்க  பிரசுரிப்பு | உங்கள் கருத்து

ஐ.நா. அமைதிகாக்கும் பணிக்காக இலங்கை இராணுவ குழு தென் சூடான் பயணம்

ஐ.நா. அமைதிகாக்கும் பணிக்காக இலங்கை இராணுவ குழு தென் சூடான் பயணம்

[2019/07/03]

ஐக்கிய நாடுகள் சபையின் அமைதிகாக்கும் பணியின் 6-வது கட்டத்தின் கீழ், தென் சூடானின் போர் நகரில் உள்ள ஸ்ரீமெட் லெவல் 2 மருத்துவமனையில் பணியாற்றுவதற்காக 11இராணுவ அதிகாரிகள் உட்பட 61 இராணுவ வீரர்கள் அடங்கிய குழுவினர் இன்று (ஜூலை, 03) தென் சூடான் நோக்கி பயணமானார்கள். ஐக்கிய நாடுகள் சபையின் அமைதிகாக்கும் பணியின் 5 வது கட்டத்தின் கீழ் தென் சூடானில் தங்கள் பதவிக்காலத்தினை வெற்றிகரமாக முடித்த பின்னர் தாயகம் திரும்பும் 62 இராணுவ வீரர்கள் அடங்கிய குழுவினருக்கு பதில் குழுவினராக இவர்கள் அங்கு செல்வதாக இராணுவ தகவல்கள் தெரிவிக்கின்றன.

இலங்கை இராணுவம், ஐ.நா. அமைதிகாக்கும் பணியின் கீழ் சில ஆண்டுகளுக்கு முன்பு தென் சூடானின் போர் நகரில் ஸ்ரீமெட் லெவல் 2 மருத்துவமனையை நிறுவியது. இம்மருத்துவமனை, சத்திர சிகிச்சைக் கூடம், பிரசவ அறை, தீவிர கண்காணிப்பு சிகிச்சை பிரிவு, அவசர சிகிச்சை பிரிவு, வெளி நோயாளர் பிரிவு, பல் அறுவை சிகிச்சை, மருந்தகம், மருந்துப்பொருட்கள் களஞ்சிய அறை, கதிரியக்கவியல் பிரிவு, மருத்துவ ஆய்வகம், ஈ.சி.ஜி அறை, கருக்கலைப்பு பிரிவு, உயிரியல் மருத்துவ பொறியியல் பிரிவு, மருத்துவ கழிவுகளை அகற்றும் பிரிவு, குளிரூட்டப்பட்ட வசதிகளைக் கொண்ட பிரேத அறை , தனிநபர் வார்டுகள், சலவை பிரிவு, மற்றும் காற்றோட்டம் திறன்களைக் கொண்ட ஏரோ-மருத்துவ வெளியேற்ற வசதிகள் உள்ளிட்ட இரண்டாம் நிலை மருத்துவ சேவைகளுக்கு தேவையான அனைத்து பிரிவுகளையும் கொண்டுள்ளது.

 செய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது

© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்

உங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்