››› முன்பக்கம்    

+ பெரிதாக்க | - சிறிதாக்க  பிரசுரிப்பு | உங்கள் கருத்து

‘ஹஸலக காமினியின்’ 28வது ஞாபகர்த்த தினம் அனுஷ்டிப்பு

‘ஹஸலக காமினியின்’ 28வது ஞாபகர்த்த தினம் அனுஷ்டிப்பு

[2019/07/11]

இலங்கையின் 6வது சிங்க ரெஜிமென்ட் படைப்பிரிவில் சேவையாற்றிய கோப்ரல் காமினி குலரத்தனவின் 28வது வருட ஞாபகார்த்த தினம் கொழும்பு 03 இல் உள்ள சுற்றுலாத்துறை அமைச்சின் கேட்போர் கூடத்தில் இன்று (ஜுலை, 11) இடம்பெற்றது. குறித்த நிகழ்வு சபாநாயகர் கௌரவ. கரு ஜயசூரிய அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.

இன்று இடம்பெற்ற கோப்ரல் காமினி குலரத்தனவின் ஞாபகார்த்த தின நிகழ்வில் ஊடக மற்றும் பதில் பாதுகாப்பு அமைச்சருமான கௌரவ. ருவன் விஜேவர்தன மற்றும் பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் எஸ்எச்எஸ்.கோட்டேகொட (ஓய்வு) டப்டப்வீ ஆர்டப்பீ ஆர்எஸ்பி வீஎஸ்வீ யுஎஸ்பி என்டிசி ஆகியோரும் கலந்து சிறப்பித்தனர்.

குறித்த ஞாபகார்த்த தின நிகழ்வின் நிகழ்ச்சி நிரல்கள், உயிர்நீர்த்த படைவீரர்கள் மற்றும் உயிர்த்த ஞாயிறு குண்டுவெடிப்பில் பாதிக்கப்பட்டவர்கள் ஆகியோரினை நினைவு கூர்ந்து மௌன அஞ்சலி செலுத்தப்பட்ட பின் ஆரம்பமாகின. அதனைத்தொடர்ந்து இடம்பெற்ற சமய அனுஷ்டானங்களின் பின்னர் ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோரின் செய்திகள் வாசிக்கப்பட்டன. ‘ஹஸலக காமினி’ என அறியப்படும் கோப்ரல் காமினி குலரத்தன, 1991ஆம் ஆண்டு ஜுலை மாதம் இடம்பெற்ற ஆனையிறவு முகாம் முற்றுகையின்போது எதிரிகளின் ஊடுருவலைத் தடுப்பதற்காகவும் சக படை வீரர்களின் உயிர்களை பாதுகாப்பதற்காகவும் தனது உயிரை தியாகம் செய்தார். இவ்வீரரின் தன்னலமற்ற இவ் வீரதீரச் செயல் காரணமாக இலங்கை இராணுவத்தின் அதி உயர் விருதான “பரம வீர விபூஷனய” (PWV) விருது அவருக்கு வழங்கப்பட்டது.

இந்நிகழ்வில் சமய தலைவர்கள், அமைச்சர்களான ஜோன் அமரதுங்க, விஜித் விஜிதமுனி சொய்சா, இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் அலுவிகார,ஹஸலக காமினியின் தாயார் திருமதி. ஜூலியட் , சிரேஷ்ட இராணுவ அதிகாரிகள் மற்றும் கோப்ரல் காமினியின் குடும்ப உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

     

 



செய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது

© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்

உங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்