››› முன்பக்கம்    

+ பெரிதாக்க | - சிறிதாக்க  பிரசுரிப்பு | உங்கள் கருத்து

வன்னியில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட தொழில் பயிற்சி வசதி தொழில் பயிற்சி மத்திய நிலையத்திடம் ஒப்படைப்பு

வன்னியில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட தொழில் பயிற்சி கட்டிடம் தொழில் பயிற்சி மத்திய நிலையத்திடம் ஒப்படைப்பு

[2019/07/17]

இலங்கை விமானப்படையினரின் நிபுணத்துவ உதவியுடன் நிர்மாணிக்கப்பட்ட பூவரசங்குளம் தொழில் பயிற்சி மத்திய நிலைய கட்டிடம் தொழில் பயிற்சி மத்திய நிலையத்திடம் கடந்த திங்கள்கிழமையன்று (ஜூலை, 15) ஒப்படைக்கப்பட்டது. நல்லிணக்க பொறிமுறையை ஒருங்கிணைப்பதற்கான செயலகத்தின் (SCRM) நிதி அனுசரணையுடன் கட்டுமானப் பணிகளை விமானப்படை மேற்கொண்டதாக விமானப்படை தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த ஆண்டு (2018) டிசம்பர் மாத பிற்பகுதியில் இத் திட்டத்தின் நிர்மாணப்பணிகள் ஆரம்பமாகின. வன்னியியில் உள்ள இலங்கை விமானப்படை ரெஜிமென்டின் பயிற்சி பாடசாலையினால் முன்னெடுக்கப்பட்ட மூன்றாம் நிலை பயிற்சி நிலையத்திற் கட்டுமான பணிகள் இவ் ஆண்டு (2019) ஜனவரி மாத நடுப்பகுதியில் முடிக்கப்பட்டது.

வன்னி விமானப்படை ரெஜிமென்ட் பயிற்சி பாடசாலையின் கட்டளைத்தளபதி எயார் கொமடோர் கேகேஏகே களுவாராச்சி அவர்களினால் வவுனியா தொழிற்பயிற்சி மத்திய நிலையத்தின் பிரதி பணிப்பாளர் திரு. வீ. கனகசுந்தரம் அவர்களிடம் இத் தொழில் பயிற்சி வசதிகள் கையளிக்கப்பட்டன.

இந்நிகழ்வில் சிரேஷ்ட விமானப்படை அதிகாரிகள் மற்றும் அரச அதிகாரிகள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

 



செய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது

© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்

உங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்