››› முன்பக்கம்    

+ பெரிதாக்க | - சிறிதாக்க  பிரசுரிப்பு | உங்கள் கருத்து

இராணுவத்தினரால் தேவையுடைய குடும்பத்தினருக்கு புதிய வீடு நிர்மாணிப்பு

இராணுவத்தினரால் தேவையுடைய குடும்பத்தினருக்கு புதிய வீடு நிர்மாணிப்பு

[2019/08/13]

இராணுவத்தின் ஒத்துழைப்பு சமூக பொறுப்புணர்வு திட்டத்தின் கீழ் வன்னி பிராந்தியத்தில் தேவையுடைய சிவிலியன் குடும்பம் ஒன்றுக்கான புதிய வீட்டின் நிர்மாணப்பணிகள் அண்மையில் (ஆகஸ்ட், 08) ஆரம்பிக்கப்பட்டுள்ளது. கடந்தவாரம் உறவ மகசேனபுற பகுதியில் இப்புதிய வீட்டிற்கான அடிக்கல் நாட்டும் வைபவம் இடம்பெற்றதாக இராணுவத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதற்கமைய வன்னி பாதுகாப்பு படை தலைமையக ஒத்துழைப்பு சமூக பொறுப்புணர்வு திட்டத்தின் கீழ் நிர்மாணிக்கப்படும் பதினோறாவது வீடாக இது காணப்படுகிறது. இவ்வீட்டுக்கான பயனாளியாக வவுனியாவின் கிராமப்புறத்தில் வசிக்கும் என் ஜீ கருணாரத்ன குடும்பம் காணப்படுவதுடன், இவ்வீட்டினை நிர்மாணிப்பதற்கான நிதியுதவியினை அவுஸ்திரேலியாவை சேர்ந்த நபர் ஒருவர் வழங்யுள்ளார்.

வட பிராந்தியத்தில் பின்தங்கிய சமூகங்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்தும் வகையில் முன்னெடுக்கப்பட்டுவரும் இலங்கை இராணுவத்தின் சமூக நலத்திட்டங்களின் ஒரு பகுதியான இத்திட்டத்தின்கீழ் பெரும் எண்ணிக்கையிலான குடும்பங்கள் நன்மையடைகின்றமை குறிப்பிடத்தக்கது.

கடந்தவாரம் இடம்பெற்ற புதிய வீட்டிற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வில், சிரேஷ்ட இராணுவ மற்றும் அரச அதிகாரிகள் உள்ளிட்ட பெரும் எண்ணிக்கையிலான சிவிலியன்கள் பலரும் கலந்துகொண்டனர்.

 செய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது

© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்

உங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்