››› முன்பக்கம்    

+ பெரிதாக்க | - சிறிதாக்க  பிரசுரிப்பு | உங்கள் கருத்து

பயங்கரவாதிகளால் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகளை விடுவிக்க ஒத்திகை பயிற்சி நடவடிக்கைகள் முன்னெடுப்பு

[2019/09/14]

தற்போது நடைபெற்றுவரும் “நீர்க்காக தாக்குதல் பயிற்சி –2019” இன் ஒரு பகுதியான களமுனை போர் பயிற்சி நடவடிக்கைகள் கொழும்பில் நேற்று (செப்டம்பர், 13) இடம்பெற்றது. இவ் ஒத்திகை பயிற்சி நடவடிக்கையானது மத்திய வங்கி கட்டிடத்திற்குள் பயங்கரவாதிகள் ஊடுருவி கண்மூடித்தனமான முறையில் அங்குள்ள பொதுமக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடாத்துவதாகவும் கொலை செய்வதாகவும் கிடைக்கபெற்ற உளவுத்துறை தகவலை அடுத்து இவ் ஒத்திகை பயிற்சி நடவடிக்கைகள் கொழும்பில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதன்பிரகாரம் டீ - 56 மற்றும் மாற்றியமைக்கப்பட்ட பதிப்புகள், எல்எம்ஜிக்கள், கைத்துப்பாக்கிகள், கைக்குண்டுகள், சினைப்பர் துப்பாக்கிகள் மற்றும் வெடிபொருட்கள் ஆகியவற்றுடன் 07 தொடக்கம் 12 பேர் கொண்ட ஒரு பயங்கரவாதக்குழுவினர் தங்களது காவலில் உள்ள பணயக்கைதிகளை விடுவிக்க 100,000.00 அமெரிக்க டாலர் மீட்புத் தொகையினை பதிலீடாக கோரியிருந்தனர்.

இவ் அவசர நிலைமைக்கு பதிலளிக்கும் வகையில் 6 எட்டு பேர் கொண்ட அணிகள், ஒரு ரிசர்வ் ஸ்ட்ரைக் போர்ஸ் குழுவினருடன் மற்றும் மற்றுமொரு எட்டு பேர் கொண்ட குழுவினரும் இணைந்து மேற்கொண்ட ஒரு ஒத்திகை பயிற்சி நடவடிக்கையையினூடாக அனைத்து வங்கி ஊழியர்களையும் மீட்டுள்ளனர். பெல் 212 உலங்குவானூர்தி மூலம் கட்டிடத்தின் மேல்பகுதிக்கு சென்றடைத்த அதேவேளை தரைப்படைகளுக்கு தேவையான அனைத்து பாதுகாப்புக்களையும் கொம்பட் ரைடர்கள் வழங்கினர். மேலும், நகர்புற சண்டை நடவடிக்கையில் சிறப்பு பயிற்சி பெற்ற விசேட படையினர் வங்கி கட்டிடத்திற்குள் சிக்கிய வங்கி ஊழியர்களை மீட்பதற்காக இணைந்திருந்தனர். சிறந்த ஒருங்கிணைப்புடன் மேற்கொள்ளப்பட்ட இவ் ஒத்திகை பயிற்சி நடவடிக்கை வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு பணயக்கைதிகள் அனைவரும் பாதுகாப்பாக விடுவிக்கப்பட்டதுடன், அனைத்து பயங்கரவாதிகளும் கொல்லப்பட்டனர்.

10ஆவது முறையாகவும் இலங்கை இராணுவம் ஏற்பாடுசெய்துள்ள இவ்வருடாந்த களமுனை கூட்டு முப்படை பயிற்சியில் 2400 இராணுவ வீரர்கள், 400 கடற்படை வீரர்கள் மற்றும் 200 விமானப்படை வீரர்கள் கலந்துகொள்வதுடன், வெளிநாடுகளைச் சேர்ந்த 100ற்கும் மேற்பட்ட இராணுவ பிரதிநிதிகள் மற்றும் கண்காணிப்பாளர்களும் பங்கேற்கின்றமை குறிப்பிடத்தக்கது.

 



செய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது

© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்

உங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்