››› முன்பக்கம்    

+ பெரிதாக்க | - சிறிதாக்க  பிரசுரிப்பு | உங்கள் கருத்து

ஊடகங்களில் வெளியிடப்பட்ட தவறான செய்தி குறித்த தெளிவு

ஊடகங்களில் வெளியிடப்பட்ட தவறான செய்தி குறித்த தெளிவு

[2019/09/18]

உயித்த ஞாயிறு சம்பவத்தைப் போன்ற ஒரு தாக்குதலை சில இராணுவ வீரர்களின் உதவியுடன் தொடங்க இருப்பது தொடர்பான செய்தி இப்போது இணையம், அச்சு மற்றும் இலத்திரனியல் ஊடகங்களில் பரவி வருகிறது.

இலங்கை இராணுவத்தின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தி தீங்கிழைக்கும் வகையில் முற்றிலும் புனையப்பட்டு இச் செய்தி வெளியிடப்பட்டுள்ளது என்று உறுதியாகக் தெரிவித்தார். மேலும், இவ்வாறானதொரு செய்தி மக்களின் நாளாந்த செயற்பாடுகளில் பாதிப்பையும் அவர்களிடத்தில் தேவையில்லாத பீதியையும் உருவாகும் என்பதாகவும் தெரிவித்தார். இச்சம்பவத்துடன் தொடர்புடைய நபர்களை கண்டுபிடிப்பதற்கான புலனாய்வுகளை இலங்கை இராணுவத்தினர் மற்றும் குற்றவியல் புலனாய்வு திணைக்களம் என்பன முன்னெடுத்து வருகின்றன.

எனவே, பல்வேறு குழுக்களால் வெவ்வேறு நலன்களுக்காக இவ்வாறு ஆதாரமற்ற செய்திகளைப் வெளியிடுவது பற்றி கவலைப்பட வேண்டாம் என்று பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
 

 



செய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது

© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்

உங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்