மின்அஞ்ஞல் பிரசுரிப்பு உங்கள் கருத்து

යාවත්කාලීන වේලාව: 8/31/2016 4:27:17 PM “கொழும்பு பாதுகாப்பு மாநாடு – 2016” க்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி – இராணுவம்

“கொழும்பு பாதுகாப்பு மாநாடு – 2016” க்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி – இராணுவம்

[2016/08/31]

கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நாளை( செப்டம்பர்.1) நடைபெறவுள்ள “கொழும்பு பாதுகாப்பு மாநாடு– 2016”ற்கான அனைத்து ஏற்பாடுகளும் நிறைவு பெற்றுள்ளதாக இராணுவ ஊடக மையம் தெரிவித்துள்ளது.

“மென்வலு மற்றும் உலகளாவிய விடயங்களில் அதன் செல்வாக்கு” என்ற தொனிப்பொருளில் இரண்டு நாட்கள் நடைபெறவுள்ள சர்வதேச பாதுகாப்பு மாநாட்டில் இலங்கை உட்பட 71 நாடுகளைச் சேர்ந்த 125 வெளிநாட்டவர்கள் உள்ளடங்களாக 800 பேர் பங்குபற்றவுள்ளனர்.
பாதுகாப்பு செயலாளர் பொறியியலாளர். கருணாசேன ஹெட்டியாராச்சி மற்றும் இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் கிரிஷாந்த டி சில்வா ஆகியோர் இந்நிகழ்வில் முக்கிய உரைகளாற்றவுள்ளனர்.

குறித்த இப் பாதுகாப்பு மாநாடு 2011 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டதுடன் 2016ஆம் ஆண்டிலிருந்து கொழும்பு பாதுகாப்பு மாநாடு என பெயர் மாற்றம் பெற்றமை குறிப்பிடத்தக்கது.

 

தொடர்பான செயதிகள் >>

செப்டம்பரில் “கொழும்பு பாதுகாப்பு மாநாடு - 2016”


செய்திகளில் அடங்கியுள்ள அடிப்டைக் கருத்துக்ளை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்ட்டுள்ளது.

© 2008 பாதுகாப்பு ,பொதுமக்கள் பாதுகாப்பு,சட்டமும் ஒழுங்கும் பற்றிய அமைச்சுககே உரிமை உடயதாகும்

உங்கள் என்னங்களும் கருத்துக்களும : சர்வதேச பதிப்பாசிரியர்