மின்அஞ்ஞல் பிரசுரிப்பு உங்கள் கருத்து

යාවත්කාලීන වේලාව: 2/20/2017 1:35:32 PM 'செனஹச சியபத' வீட்டுத்திட்ட பயனாளிகளுக்கு சிங்கள புதுவருடத்திற்கு முன் வீடுகள்

'செனஹச சியபத' வீட்டுத்திட்ட பயனாளிகளுக்கு சிங்கள புதுவருடத்திற்கு முன் வீடுகள்

[2017/02/18]

அரநாயக்க மண்சரிவினால் பாதிக்கப்பட்டோருக்காக பாதுகாப்பு அமைச்சின் மேற்பார்வையின் கீழ் முப்படை வீரர்களினால் நிர்மாணிக்கப்பட்டுவரும் 'செனஹச சியபத' வீட்டுத்திட்டத்தின் நிர்மாணப்பணிகள் பூர்த்தியடடையும் நிலையில் உள்ளது. குறித்த இத்திட்டத்தின் நிர்மாணப்பணிகளை பார்வையிடும் வகையில் அண்மையில் (பெப்ரவரி, 17) விஜயம் ஒன்று மேற்கொள்ளப்பட்டது.

பாதுகாப்பு அமைச்சின் சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் அனுசரணை வழங்கும் நிறுவனங்களின் பிரதிநிதிகள் உள்ளிட்டோர் மேற்படி கண்காணிப்பு விஜயத்தில் ஈடுபட்டனர். அவர்கள் நிர்மாணப்பணிகளின் தற்போதைய நிலைமைகள் குறித்து கேட்டறிந்து கொண்டதுடன் எதிர்வரும் தமிழ் சிங்கள புது வருடத்திற்கு முன் இத்திட்டத்தினைப் பூர்த்தி செய்து பயனாளிகளுக்கு வழங்குவதற்கு ஆவன செய்யும்படியும் கேட்டுக்கொண்டனர். மேலும் அவர்கள் பயனாளிகளைச் சந்தித்து கலந்துறையாடல்களையும் மேற்கொண்டனர்.

பாதுகாப்பு அமைச்சின் மேற்பார்வையின் கீழ் முன்னெடுக்கப்படும் குறித்த இத்திட்டத்திற்கான நிதி அனுசரணை இடர் முகாமைத்துவ அமைச்சு, டயலோக் அக்சியடா, இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் , இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனம் மற்றும் அசோசியேட் செய்திபத்திரிகை ஆகிய நிறுவனங்களின் கூட்டிணைப்பில் உருவான 'செனஹச சியபத நிதியத்தின் மூலம் வழங்கப்படுகின்றது.

இதேவேளை, இத்திட்டத்தின் நிர்மாணப்பணிகள் நிபுணத்துவம் வாய்ந்த முப்படைகளின் தொழிநுட்ப மற்றும் ஆளணியினரின் உதவியுடன் இடம்பெறுகின்றது.

இவ்விஜயத்தில் காணி அமைச்சின் செயலாளர் திரு. சரத் சந்த்ரசிறி விதான, பாதுகாப்பு அமைச்சின் மேலதிக செயலாளர் திரு. டப்.ஏ. குலசூரிய, டயலோக் அக்சியடா நிறுவனத்தின் வர்த்தக நாம மற்றும் ஊடக முகாமையாளர் திரு. ஹர்ஷ சமரநாயக்க, தேசிய நிர்மாணத்துறை ஆய்வு நிலையத்தின் சிஷ்ட புவியியல் ஆய்வாளர் திரு. எச்எம்எல் இந்த்ரதிலக, எக்ஸ்பிரஸ் செய்தித்தாள்கள் தலைமை நிர்வாக அதிகாரி திரு. ஹர்ஷன் கருணாரத்ன, அரநாயக்க பிரதேச செயலாளர் திரு. இசட்ஏஎம். பைசர் மற்றும் முப்பட்டைகளின் சிரேஷ்ட அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

அரநாயக்க மண்சரிவினால் பாதிக்கப்பட்டோருக்கு வீடுகளை அமைத்துக் கொடுக்கும் இத்திட்டத்திற்கான அடிக்கல் நாட்டும் வைபவம் கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.


செய்திகளில் அடங்கியுள்ள அடிப்டைக் கருத்துக்ளை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்ட்டுள்ளது.

© 2008 பாதுகாப்பு ,பொதுமக்கள் பாதுகாப்பு,சட்டமும் ஒழுங்கும் பற்றிய அமைச்சுககே உரிமை உடயதாகும்

உங்கள் என்னங்களும் கருத்துக்களும : சர்வதேச பதிப்பாசிரியர்