››› முன்பக்கம்    

+ பெரிதாக்க | - சிறிதாக்க  பிரசுரிப்பு | உங்கள் கருத்து

பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரெஞ்சு கடற்படை கப்பலுக்கு விஜயம்

பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரான்ஸ் கடற்படை கப்பலுக்கு விஜயம்

[2017/06/20]

 

நல்லெண்ண நோக்கில் இலங்கைக்கு வருகை தந்துள்ள பிரான்ஸ் நாட்டின் கடற்படை கப்பலை பார்வையிடவென இன்று (ஜூன்,20) பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கௌரவ ருவன் விஜேவர்தன அவர்கள் விஜயம் ஒன்றை மேற்கொண்டார்.

குறித்த கப்பலை பார்வையிடுவதற்கென அங்கு வருகை தந்த இராஜாங்க அமைச்சரை அக்கப்பலின் கட்டளைத்தளபதி சகல கடற்படை மரியாதைகளுடன் வரவேற்றார். கப்பலை சுற்றிப்பார்வையிட்ட இராஜாங்க அமைச்சர், குறித்த கப்பலின் அதிகாரிகளுடன் சிநேகபூர்வ கலந்துரையாடலிலும் ஈடுபோட்டார். மேலும் அவர் விருந்தினர் அறிக்கையிடும் ஏட்டிலும் தனது வருகையைப் பதிவிட்டார்.

இந்நிகழ்வில் இலங்கைக்கான பிரான்ஸ் தூதுவர் அதிமேதகு ஜீன் மாறிச் சுச், பிரான்ஸ் கடற்படையின் விஷேட செயலணிப்பிரிவின் கட்டளைத்தளபதி ரியர் அட்மிரல் ஒலிவியர் லேபாஸ் மற்றும் இலங்கை கடற்படை அதிகாரிகளின் பிரதானி ரியர் அட்மிரல் சிரிமேவன் ரணசிங்க ஆகியோர் கலந்து கொண்டனர்.செய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது

© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்

உங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்