››› முன்பக்கம்    

+ பெரிதாக்க | - சிறிதாக்க  பிரசுரிப்பு | உங்கள் கருத்து

திருகோனமலையில் பசுபிக் பங்காண்மை - 2018 நடவடிக்கைகள் நிறைவு

திருகோனமலையில் பசுபிக் பங்காண்மை - 2018 நடவடிக்கைகள் நிறைவு

[2018/05/11]

யூ.எஸ்.என்.எஸ். மேர்சி நாட்டை விட்டு புறப்பட்டு சென்றது.

பசுபிக் பங்காண்மை -2018 நடவடிக்கையை மேற்கொள்ளும் நிமித்தம் கடந்த மாதம் (ஏப்ரல்) 25ஆம் தகதி இலங்கைக்கு வருகை தந்த அமெரிக்க கடற்படையின் மருத்துவமனைக் கப்பலான யூ.எஸ்.என்.எஸ். மேர்சி திருகோணமலையில் தனது பணிகளை நிறைவு செய்து இம்மாதம் (மே) 08 திகதி செவ்வாய்க்கிழமை நாட்டை விட்டு புறப்பட்டு சென்றது.

இலங்கைக்கு வருகைதந்த அமெரிக்க கடற்படையின் இராணுவ கட்டளை மருத்துவமனை கப்பலான 'யூஎஸ்என்எஸ் மேர்ஸி' வருடாந்த பன்முக மனிதாபிமான உதவி மற்றும் அனர்த்த நிவாரண தயாரிப்புத் திட்ட பணிகளில் கலந்து கொள்ள வருகை தந்திருந்தது.

இந்து –ஆசிய- பசிபிக் பிராந்தியத்தில் இடம்பெறுகின்ற இப் பணியின் பிரதான நோக்கமாக, பிராந்திய ஒத்துழைப்பினை மேம்படுத்தி அனர்த்த நிலைமைகள் மற்றும் அவசரநிலைமைகளின்போது தேவைப்படுகின்ற மருத்துவ உபகரணங்களை தயார்நிலையில் வைத்திருப்பதாகும்.

ஆவுஸ்திரேலியா, கனடா, சிலி, ஜப்பான், பேரு மற்றும் ஐக்கிய இராச்சியம் ஆகிய நாடுகளின் சிவில் பணியாளர்கள், அமெரிக்க மற்றும் அதன் பங்காளி நாடுகளின் பணியாளர்கள் ஆகியோர் சிவில் பொறியியல் திட்டங்களின் பன்முக மனிதாபிமான உதவி மற்றும் அனர்த்த நிவாரண தயார்நிலை மற்றும் ஏனைய சிவிக் எல்லை திட்டங்கள் தொடர்பான பணிகளினை இணை நாட்டு பணியாளர்களுடன் இணைந்து மேற்கொள் கின்றனர்.

இம் மருத்துவக் கப்பலில், அமெரிக்க மற்றும் இலங்கை மருத்துவ தொழில்சார் நிபுணர்கள் இணைந்து ஒரு ரோபோ அறுவை சிகிச்சை உட்பட 24 மருத்துவ அறுவை சிகிச்சைகளை செய்துள்ளனர். ரோபோ அறுவை சிகிச்சையானது உலகில் முதல் தர சிகிச்சியாக விளங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.

மேலும், திருகோணமலையின் பல்வேறு பகுதிகளில் சுமார் 5500 க்கும் அதிகமான நோயாளர்களுக்கு மருத்துவ சிகிச்சைகள் வழங்கப்பட்டுள்ளன. அத்துடன், 500 க்கும் மேற்பட்ட கால்நடை அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு தடுப்பு ஊசிகளும் ஏற்றப்பட்டுள்ளன.
இதேவேளை, அமெரிக்க 7ஆவது பேன்ட் வாத்திய இசைக்குழுவினர் இலங்கை கடற்படையினருடன் இணைந்து, பாடசாலை மாணவர்கள் உட்பட பெரும் திரளான மக்களுடன் பொழுதுபோக்கு நிகழ்வுகளையும் மேற்கொண்டுள்ளனர்.

இவ்வருடாந்த நிகழ்வின் நிறைவு விழாவில், கிழக்கு மாகாண ஆளுநர் கௌரவ, ரோஹித்த போகொல்லாகம, பிரதி கடற்படை பிரதானி, கடற்படை நடவடிக்கைகளுக்கான பணிப்பாளர் நாயகம், ரியர் அட்மிரல் பியால் டி சில்வா, சிரேஷ்ட அரச அதிகாரிகள் மற்றும் இலங்கை கடற்படையினர் உள்ளிட்டோர் கலந்து சிறப்பித்தனர்.

மருத்துவமனை கப்பலான 'யூஎஸ்என்எஸ் மேர்ஸி' நாட்டை விட்டு புறப்பட்டு அடுத்த துறைமுகங்களான வியட்நாம் மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளுக்கு செல்கின்றது.

பசுபிக் பங்காண்மை திட்டத்தின் அமெரிக்க கடற்படை கப்பல் 'போல் ரிவர்' இன் ஆரம்பப் பணி மார்ச் மாதம் 2017ஆம் ஆண்டு ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் நிறுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

     
     

பசுபிக் பங்காண்மை - 2018 நடவடிக்கைகளுக்காக அமெரிக்க மருத்துவமனைக் கப்பல் வருக

ஹம்பாந்தோட்டையில் இடம்பெற்ற பசுபிக் பார்ட்னர்ஷிப் 2017 நிகழ்வுகள் வெற்றிகரமாக நிறைவ

ஹம்பாந்தோட்டையில் கடற்படையினரின் விழிப்பூட்டல் நிகழ்வு

ஐக்கிய அமெரிக்க கடற்படை கப்பல் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில



செய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது

© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்

உங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்