››› முன்பக்கம்    

+ பெரிதாக்க | - சிறிதாக்க  பிரசுரிப்பு | உங்கள் கருத்து

பாதுகாப்பு படையினரின் நிவாரண நடவடிக்கைகள் தொடர்கின்றன

பாதுகாப்பு படையினரின் நிவாரண நடவடிக்கைகள் தொடர்கின்றன

[2018/05/25]

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் தொடர்ந்து அதிக மழைவீழ்ச்சி கிடைக்கப்பெற்றவண்ணமுள்ளது. மேலும் மழைவீழ்ச்சி குறைவதற்கான சாத்தியக்கூறுகள் அரிதாகவே காணப்படுகின்றன. இந்நிலையில், கடந்த சில நாட்களில் ஏற்பட்ட பாரிய வெள்ளம், நாட்டில் சுமார் மூன்றில் இரண்டு பங்கு மக்களில் அன்றாட வாழ்க்கையை பெரிதும் பாதித்துள்ளது.

தென்மேற்கு பருவப்பெயர்ச்சி மழை தொடங்கியுள்ள அதேவேளை நாட்டில் முன்னொருபோதும் இல்லாத வகையில் மழைவீழ்ச்சி கிடைக்கப்பெற்று வருகின்றது. இதன் காரணமாக ஏற்பட்ட வெள்ளம், மண்சரிவு, பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கம் ஆகிய அனர்த்தங்களின் மூலம் இதுவரை 13 உயிர்கள் காவுகொள்ளப்பட்டுள்ளன.

இந்நிலையில் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்வதற்காக முப்படையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இன்றையதினம் சுமார் 820ற்கு மேற்பட்ட முப்படை வீரர்கள் கம்பஹா, கொழும்பு, மாத்தறை, களுத்துறை, கேகாலை, புத்தளம், இரத்தினபுரி, காலி, மற்றும் குருநாகல் ஆகிய பகுதிகளில் மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதற்கு மேலதிகமாக இராணுவ மற்றும் கடற்படையினருக்கு சொந்தமான 63 படகுகள், கவச வாகனங்கள், பேருந்துகள், உலவுயியந்திரங்கள் மீட்பு மற்றும் நிவாரண பணிகளுக்காக பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

அத்துடன் அவசரகால சூழ்நிலைகளை எதிர்கொள்ள நேரிடும் பிராந்தியங்கள் பலவற்றில் இலங்கை இராணுவம், கடற்படை மற்றும் விமானப்படைகளைச் சேர்ந்த சுமார் 7300 மேற்பட்ட படை வீரர்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை, தெற்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் (SFHQ-West) படை வீரர்களினால் மொரியக்குளம் விவசாயத்திற்காக பயன்படுத்தப்படும் கால்வாய் புனரமைக்கப்பட்டது. குறித்த புணரமைப்பு பணியினை நீர்பாசனத் திணைக்கள அதிகாரிகளிடம் கலந்தாலோசித்து, கால்வாயின் நீர் விநியோகப் பகுயில் எவ்விதமான வெடிப்புக்கள் எதுவும் ஏற்படதவாறு மண் மூட்டைகள் அமைக்கப்பட்டன.

கடுமையான காற்றில் பாதிக்கப்பட்ட குருநாகல், நிக்கவரெட்டிய, ரஸ்னாயகபுர மற்றும் பொல்கஹவெல ஆகிய பிரதேசங்களில் வீசிய கடுமையான காற்றில் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு விரைந்த படையினர் அப்பகுதிகளில் நிவாரண நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர். அத்துடன் பாதிக்கபட்ட பலர் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டு அவர்களுக்கான உலர் உணவு மற்றும் தங்குமிட வசதிகள் வழங்கப்பட்டுவருகின்றன.

மேலும் காலி, களுத்துறை, மாத்தறை, இரத்தினபுரி, குருநாகல், கண்டி, பதுளை, நுவரெலியா, கேகாலை, கொழும்பு, மொனராகலை, பொலன்னறுவை, கம்பஹா மற்றும் புத்தளம் மாவட்டங்களில் 500 க்கும் மேற்பட்ட படை வீரர்கள் நிவாரண நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.



செய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது

© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்

உங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்