››› முன்பக்கம்    

+ பெரிதாக்க | - சிறிதாக்க  பிரசுரிப்பு | உங்கள் கருத்து

முழு மூச்சில் இடம்பெறும் வெள்ள நிவாரண நடவடிக்கைகள்


முழு மூச்சில் இடம்பெறும் வெள்ள நிவாரண நடவடிக்கைகள்

[2018/05/26]

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக ஏற்பட்டுள்ள வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் உள்ள ஆயிரக்கணக்கான பொதுமக்களுக்கு இலங்கை இராணுவத்தின் மீட்பு மற்றும் நிவாரண குழு, அவசியமான பொருட்களையும் சேவைகளையும் துரித கதியில் வழங்கி வருகின்றது.

நாட்டின் 20 மாவட்டங்கள் தென்மேற்கு பருவப்பெயர்ச்சி மழை காரணமாக வெள்ளம் மற்றும் மண்சரிவு ஆகிய அனர்த்தங்களுக்கு முகம்கொடுத்துள்ளது. ஏற்பட்டுள்ளன. வெள்ளம், மண்சரிவு மற்றும் மின்னல் தாக்கம் ஆகிய அனத்தங்களினால் இதுவரை, 16 பேர் உயிரிழந்துள்ளதுடன் ஒருவர் காணாமல் போயுள்ளார்.

இலங்கை இராணுவத்தின் மீட்பு மற்றும் நிவாரண குழுவினர், இதர அரச நிறுவனங்களுடன் இணைந்து மீட்பு மற்றும் நிவாரண பணிகளை துரித கதியில் முன்னெடுத்து வருகின்றனர்.

கேகாலை, களுத்துறை, பொலன்னறுவை, கண்டி, காலி, இரத்தினபுரி, கம்பஹா, புத்தளம், மாத்தறை, குருநாகல், பதுளை மற்றும் கொழும்பு மாவட்டங்களில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நூற்றுக்கணக்கான பாதுகாப்புப் படையினர் மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

இதற்கு மேலதிகமாக, தொடரும் சீரற்ற சீரற்ற காலநிலை காரணமாக ஏற்பட்டுள்ள அவசர நிலைகளை எதிர்கொள்வதற்காக 24 படைப்பிரிவுகளைச் சேர்ந்த சுமார் 1200 படைவீரர்கள் எந்நேரமும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.

நிவாரண பணிகளை முன்னெடுக்கும் இராணுவ குழுக்கள் மோசமாக பாதிக்கப்பட்ட பகுதிகளில் பொது பயன்பாட்டு சேவைகள், வீதி சீரமைப்பு, வெள்ளத் தடுப்பு முற்காப்பு நடவடிக்கைகள் உள்ளிட்ட சேவைகளை முன்னெடுத்துள்ளதுடன் சமைத்த உணவுகளை விநியோகித்தும் வருகின்றனர். மேலும், பாதிக்கப்பட்டவர்களை பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றும் நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.

இதேவேளை, இராணுவப் படையினர் நேற்று, அம்பத்தலே நீர் விநியோக நிலைய அருகில் ஏற்பட்ட தடையினை அகற்றியுள்ளனர்.



செய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது

© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்

உங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்