››› முன்பக்கம்    

+ பெரிதாக்க | - சிறிதாக்க  பிரசுரிப்பு | உங்கள் கருத்து

பாதுகாப்பு சேவைகள் கல்லூரியின் வருடாந்த பரிசளிப்பு விழாவில் ஜனாதிபதி பங்கேற்பு

பாதுகாப்பு சேவைகள் கல்லூரியின் வருடாந்த பரிசளிப்பு விழாவில் ஜனாதிபதி பங்கேற்பு

 

பாதுகாப்பு சேவைகள் கல்லூரியின் வருடாந்த பரிசளிப்பு விழா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களின் பங்கு பற்றுதலுடன் நேற்று (பெப்ரவரி,26) இடம்பெற்றது. இந்நிகழ்வானது பாதுகாப்பு சேவைகள் கல்லூரியின் கேட்போர் கூடத்தில் 2013 மற்றும் 2014 கல்வி ஆண்டுக்காக ஏற்பாடு செய்யபட்டிருந்தது.

மேற்படி நிகழ்வுக்கு வருகை தந்த ஜனாதிபதி அவர்களை இக்கல்லூரியின் மாணவர்கள் சம்பிரதாய பூர்வமாக வரவேற்றனர்.

மேலும் இந்நிகழ்வின் போது 2013 மற்றும் 2014 கல்வி ஆண்டுகளில் கல்வி மற்றும் விளையாட்டுக்களில் தமது திறமைகளை வெளிக்காட்டிய மாணவர்களுக்கான பரிசில்களையும் மற்றும் விருதுகளையும் ஜனாதிபதி அவர்கள் வழங்கி வைத்தார்.

அத்துடன் பாதுகாப்பு சேவைகள் கல்லூரியின் கல்வித் தரத்தை உயர்துவதற்காக அயராது பாடுபட்ட ஆசிரியர்களை கௌரவிக்கும் நிகழ்வொன்றும் இங்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மேலும், இந்நிகழ்வில் கல்வி அமைச்சர் கௌரவ. அகில விராஜ் காரியவசம், பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கௌரவ ருவன் விஜேவர்தன, முப்படைகளின் தளபதிகள், பொலிஸ் மா அதிபர் , கல்லூரியின் அதிபர் மற்றும் ஆசிரியர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் இது தொடர்பான செய்திகளுக்கு>>

பாதுகாப்பு சேவைகள் கல்லூரிக்கு புதிய விடுதி வசதிகள்

விரு சிசு பிரதீப’ புலமைப்பரிசில் வழங்கும் நிகழ்வில் ஜனாதிபதி கலந்து கொண்டார்

பாதுகாப்பு சேவை கல்லூரியில் ஏற்பட்ட பிரச்சினைகள் தீர்க்கப்பட்டது



செய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது

© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்

உங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்