››› முன்பக்கம்    

+ பெரிதாக்க | - சிறிதாக்க  பிரசுரிப்பு | உங்கள் கருத்து

பாதுகாப்பு சேவைகள் கல்லூரியின் வருடாந்த இல்ல விளையாட்டு போட்டியில் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கலந்து கொண்டார்

பாதுகாப்பு சேவைகள் கல்லூரியின் வருடாந்த இல்ல விளையாட்டு போட்டியில் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கலந்து கொண்டார்

குருணாகல் பாதுகாப்பு சேவைகள் கல்லூரியின் வருடாந்த இல்ல விளையாட்டு போட்டி பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கௌரவ ருவன் விஜேவர்தன அவர்களின் தலைமையில் நேற்று (மார்ச். 01) நடைபெற்றது.

இந்நிகழ்வில் பாதுகாப்புச் செயலாளர் பொறியியலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சி மற்றும் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சின் செயலாளர் திரு. ஏ.பி.ஜி கித்சிறி ஆகியோரும் கலந்து கொண்டனர்.

மேற்படி நிகழ்வுக்கு வருகை தந்த பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் அவர்களுக்கு மாணவச் சிப்பாய்கள் படையணியின் அணிவகுப்பு மரியதையுடன் அமோக வரவேற்பளிக்கப்பட்டது.

பாதுகாப்பு சேவைகள் கல்லூரியானது 2009ஆம் ஆண்டு குருணாகல் மாவட்டத்தில் 56 மாணவர்களுடன் நிறுவப்பட்டது. தற்பொழுது இக்கல்லூரியில் முப்படையினர் மற்றும் பொலீஸ் ஆகியோரின் 800ற்கும் மேற்பட்ட பிள்ளைகள் கல்வி கற்கின்றமை குறிப்பிடத்தக்கது.

மேலும், பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் இங்கு உரையாற்றுகையில் தான் இக்கல்லூரியின் வளர்ச்சியை கண்டு ஆச்சரியமடைந்தாதகவும், கொழுமபு, மற்றும் குருணாகல் மாவட்டங்களில் நிறுவப்பட்டுள்ள பாதுகாப்பு சேவைகள் கல்லூரிகளை மேலும் அபிவிருத்த செய்யும் வகையில் அரசு 200 மில்லியன் ரூபாவினை ஒதுக்கியுள்ளதாகவும் தெரிவித்தார். அத்துடன் இக்கலூரியின் வளர்ச்சிக்காக கடுமையாக உழைத்த கல்வி சார் மற்றும் கல்வி சார ஊழியர்கள் அனைவருக்கும் தனது பாராட்டினைத் தெரிவித்துக் கொண்டார். மேலும் இந்நாட்டில் நீடித்த யுத்தத்தினை முடிவுக்கு கொண்டு வரும் வகையில் நாட்டிற்காக படைவீரர்கள் செய்த உயரிய உயிர்த்தியாகங்களின் காரணமாக நாம் அனைவரும் இன்று சுதந்திரத்தையும் சமாதானத்தையும் அனுபவிப்பதாகவும் தெரிவித்த அவர், கல்வியைப் போன்றே இணைப்பாடவிதான செயற்பாடான விளையாட்டும் மிக அவசியம் எனவும் வலியுறுத்தினார்.

இந்நிகழ்வின்போது வெற்றியீட்டிய வீரர்களுக்கான சான்றிதழ்கள் மற்றும் பரிசில்களை பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் வழங்கி வைத்தார். அத்துடன் இந்நிகழ்வை நினைவு கூறும் வகையில் கல்லூரியின் அதிபரினால் இராஜங்க அமைச்சருக்கு நினைவுச்சின்னமொன்றும் வழங்கி வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் பிரதி அமைச்சர் அசோக அபேசிங்க, விமானப்படை மற்றும் கடற்படைத் தளபதிகள், சிரேஷ்ட இராணுவ அதிகாரிகள், கலவித் திணைக்களத்தின் அதிகாரிகள் மற்றும் பெரும் எண்ணிக்கையிலான பெற்றோர்களும் கலந்து கொண்டனர்.

     
     

மேலும் புகைப்படங்களை பார்வையிட >>

மேலும் இது தொடர்பான செய்திகளுக்கு>>

பாதுகாப்பு சேவைகள் கல்லூரியின் வருடாந்த பரிசளிப்பு விழாவில் ஜனாதிபதி பங்கேற்பு

பாதுகாப்பு சேவைகள் கல்லூரிக்கு புதிய விடுதி வசதிகள்

விரு சிசு பிரதீப’ புலமைப்பரிசில் வழங்கும் நிகழ்வில் ஜனாதிபதி கலந்து கொண்டார்

பாதுகாப்பு சேவை கல்லூரியில் ஏற்பட்ட பிரச்சினைகள் தீர்க்கப்பட்டதுசெய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது

© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்

உங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்