››› முன்பக்கம்    

+ பெரிதாக்க | - சிறிதாக்க  பிரசுரிப்பு | உங்கள் கருத்து

இலங்கை கடற்படையின் புதிய கப்பல் ஜனாதிபதியால் அதிகாரமளிப்பு

இலங்கை கடற்படையின் புதிய கப்பல் ஜனாதிபதியால் அதிகாரமளிப்பு

'இலங்கை கடற்படையில் "இலங்கை கடற்படை கப்பல் சயுரல' கௌரவத்துடன் இணைகிறது

[2017/08/02]

இலங்கை கடற்படையின் முதலாவது அதி தொழில்நுட்ப ஆழ்கடல் கண்காணிப்பு கப்பல், முப்படைகளின் தளபதியும் ஜனாதிபதியுமான கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களிடம் இருந்து தனக்கான ஆணையதிகாரத்தினை பெற்றுக்கொள்ளும் நிகழ்வு இன்று (ஆகஸ்ட், 02) பிற்பகல் கொழும்பு துறைமுக கிழக்கு இறங்குதுறையில் இடம்பெற்றது. இப்புதிய அதி தொழில்நுட்ப ஆழ்கடல் கண்காணிப்பு கப்பல் ”இலங்கை கடற்படை கப்பல் சயுரல” ஆக ஆணையதிகாரம் பெற்று இலங்கை கடற்படையில் இணைந்து கொண்டது.

இந்நிகழ்வில் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கௌரவ ருவன் விஜேவர்தன மற்றும் பாதுகாப்பு செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி திரு. கபில வைத்தியரத்ன ஆகியோரும் கலந்து கொண்டனர்.

கொழும்பு துறைமுக வளாகத்துக்கு வருகை தந்த ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்ர விஜேகுணரத்ன அவர்களால் வரவேற்கப்படார். அத்துடன் கடற்படை மரபுகளுக்கு அமைவாக விசேட கடற்படை அணிவகுப்பு மரியாதை ஜனாதிபதி அவர்களுக்கு வழங்கப்பட்டது. இதன்போது ஜனாதிபதி அவர்களால் புதிய கப்பலின் கட்டளை அதிகாரியிடம் கப்பலுக்கான அதிகார பத்திரம் வழங்கப்பட்டது. அவ்வேளை கப்பலின் கட்டளை அதிகாரி குறித்த பத்திரத்தை வாசித்தார்.

பின்னர் சர்வமத ஆசீர்வாதத்துடன் கப்பலின் பெயர்ப்பலகை மற்றும் உத்தியோகபூர்வ சின்னம் ஜனாதிபதி அவர்களால் திறந்து வைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து ஜனாதிபதியுடன் இணைந்து பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர், பாதுகாப்பு செயலாளர், கடற்படை தளபதி மற்றும் வருகைதந்திருந்த அதிதிகள் ஆகியோர் கப்பலினை சுற்றிப் பார்வையிட்டனர். இதன்போது ஜனாதிபதி அவர்களுக்கு கப்பலின் செயற்பாடுகள், தயார்நிலை மற்றும் தயாரிப்பு தொடர்பாக கடற்படை தளபதியினால் விளக்கமளிக்கப்பட்டது.

வரையறுக்கப்பட்ட கோவா கப்பல் கட்டும் தளத்தில் நிர்மாணிக்கப்பட்ட இலங்கை கடற்படை கப்பல் சயுரல, இலங்கை கடற்படையின் தேவைப்பாடுகளுக்கு அமைய வெளிநாட்டு கப்பல் நிர்மாணிப்பாளர்களால் நிர்மாணிக்கப்பட்ட முதலாவது அதி தொழில்நுட்ப ஆழ்கடல் கண்காணிப்பு கப்பல் ஆகும். 105.7 மீற்றர் நீளமான இந்த கப்பலின் அகலம் 13.6 மீற்றர்கள் ஆகும். மணித்தியாலத்துக்கு 26 நொட் உயர் வேகத்தில் பயணிக்கக்கூடிய திறன் கொண்ட இக்கப்பல், சாதாரண சஞ்சரிப்பு நேரத்தில் 12-14 நொட் வேகத்தில் பயணிக்ககூடியது. 7000 கடல் மைல்கள் பயண எல்லையை கொண்டுள்ள இக்கப்பல் இலகு உலங்குவானூர்தி தரையிறங்குவதற்கான இலகுரக ஹெலிகொப்ரர் இறங்குதளத்தையும் அது தரித்து வைப்பதற்கான இடத்தினையும் தன்னகத்தே கொண்டுள்ளது. அத்துடன் இக் கப்பலில் 18 கடற்படை அதிகாரிகள் மற்றும் 100 கடற்படை சிப்பாய்கள் ஒரேநேரத்தில் தங்குவதற்கான விசாலமான விடுதி மற்றும் பிற வசதிகளையும் கொண்டு காணப்படுகின்றது.

இந் நவீன கப்பல் மூலம் இலங்கையின் கடல் எல்லையில் ரோந்து நடவடிக்கைகள், தேடுதல், மனிதாபிமான உதவிகள் மற்றும் அனர்த்த நிவாரண செயற்பாடுகள் போன்றவற்றை மேற்கொள்ளக்கூடிய ஆற்றல்களைக் கொண்டுள்ளது. அத்துடன் இக்கப்பலினால் வெளிவாரி தீயணைப்பு நடவடிக்கைகளுக்கும் உதவ முடியும்.

இலங்கை கடற்படைகென இரண்டு அதி தொழில்நுட்ப ஆழ்கடல் கண்காணிப்பு கப்பல்களை நிர்மானிக்கும் ஒப்பந்தத்தில் 2014ஆண்டு பெப்ரவரி மாதம் 17ம் திகதி கையெழுத்திடப்பட்டது. மேலும் குறித்த கப்பல் உற்பத்தி பணிகள் 2014ஆம் ஆண்டு மே மாதத்தில் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்துவைக்கப்பட்டது. பின்னர், 2016 ஜூன் 10 ஆம் திகதி முதல் கப்பலின் வெள்ளோட்ட நிகழ்வு வைபவ ரீதியாக இடம்பெற்றது. அத்துடன் இக்கப்பல் உத்தியோகபூர்வமாக இவ்வாண்டு ஜுலை மாதம் 22ம் திகதி கொழுப்பு துறைமுகத்திற்கு கொண்டுவரப்பட்டது.

மேலும், இந்தியாவில் நிர்மாணிக்கப்பட்டு வரும் இரண்டாவது அதி தொழில்நுட்ப ஆழ்கடல் கண்காணிப்பு கப்பல் அடுத்த வருடம் இலங்கை கடற்படையில் இணைத்துக்கொள்ளப்படவுள்ளது. இதனால் இலங்கை கடற்படை மூலம் 200 கடல்மைல்கள் கொண்ட பிரத்தியேக பொருளாதார மண்டலம் (EEZ) கண்காணிப்பு மற்றும் 1,738,062.24 சதுர கிலோ மீற்றர் பரப்பளவில் தேடல் மற்றும் மீட்பு பணிகளில் ஈடுபடல் போன்ற கடல் நடவடிக்கைகளில் இக்கப்பல் முக்கிய பங்கு வகிக்கவுள்ளது.

இந்நிகழ்வில், மகா சங்க உறுப்பினர்கள், ஏனைய மத தலைவர்கள், அமைச்சர் மகிந்த சமரசிங்க, இந்திய பாதுகாப்பு செயலாளர்(பாதுகாப்பு உற்பத்திகள்) திரு. அஷோக் குப்தா, பாதுகாப்பு படைகளின் பிரதம அதிகாரி, இராணுவ மற்றும் விமானப்படை தளபதிகள், பொலிஸ் மா அதிபர், பாதுகாப்பு அமைச்சீன சிரேஷ்ட அதிகாரிகள், முன்னாள் கடற்படை தளபதிகள், தூதரக அதிகாரிகள், சிரேஷ்ட முப்படை அதிகாரிகள், அதிதிகள், கடற்படை சிப்பாய்கள் மற்றும் பாடசாலை மாணவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

     
     

மேலும் புகைப்படங்களை பார்வையிட >>

தொடர்பான செய்திகள் >>

இலங்கை கடற்படைக்கென நிர்மானிக்கப்பட்ட நவீன கடற்படைக்கப்பல் கொழும்பு வருகை

மிகப்பெரிய ஆழ்கடல் ரோந்துக் கப்பல் இலங்கை கடற்படையிடம் கையளிப்பு

கோவா கப்பல் தளத்தில் “SLNS சிந்துறால” ஆழ்கடல் ரோந்துக் கப்பல் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைப்பு

பாதுகப்புச் செயலாளர் ‘இலங்கை கடற்படைக் கப்பல் சயுரல’ வின் முன்னோட்ட நிகழ்வை ஆரம்பித்து வைத்தார்

இந்தியாவில் நிர்மாணிக்கப்பட்டுவரும் உயர் ரக கடலோர கண்காணிப்புக் கப்பல்களை இராஜாங்க அமைச்சர் கண்காணிப்பு



செய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது

© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்

உங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்