“நீர்க்காக தாக்குதல் பயிற்சி VIII–2017” செப்டெம்பரில் ஆரம்பம்
[2017/08/18]

செப்டம்பர் 3ஆம் திகதி இடம்பெற உள்ள “நீர்க்காக தாக்குதல்
பயிற்சி VIII–2017” ஆண்டுக்கான களமுறைப் பயிற்சி முன்னெடுப்புக்கள் இம்மாதம்
(ஆகஸ்ட்) 10ஆம் மற்றும் 11ஆம் திகதிகளில் திருகோனமலை மங்கி பிரிஜ்
பகுதியிலுள்ள 4 விஷேட படையணி தலைமையகத்தில் இடம்பெற்றுள்ளது.
குறித்த களமுறைப் பயிற்சி முன்னெடுப்பு நிகழ்வானது,
மிகவும் பயனுள்ள விடயங்களான சாத்தியக்கூறுகளை நிர்ணயித்தல்,
தெரிவுசெய்யப்பட்ட பயிற்சி நடவடிக்கைகளின் பொருத்தமின்மை மற்றும்
ஏற்றுக்கொள்ளக்கூடிய விடயங்களை தீர்மானித்தல், எந்தவொரு சூழ்நிலையையும்
எதிர்கொள்ள திட்டமிடல், அதனை வழிநடத்தல், நுட்பங்கள் மற்றும் வழிமுறைகள்
என்பவற்றை அறிந்துகொள்ளல் ஆகிய விடயங்களை முறையான களப்பயிற்சி
இடம்பெறுமுன்னர் இப்பயிற்சியில் கலந்துகொண்ட அதிகாரிகளுக்கு
பெற்றுக்கொடுக்கும் வகையில் இடம்பெற்றதாக இராணுவத்தகவல்கள் தெரிவிக்கின்றன.
இக்களமுறைப் பயிற்சி முன்னெடுப்பு நிகழ்வின்போது,
கொமாண்டோ படை மற்றும் சிறப்பு படைகள் போர் முனையில் செயல்பட்ட அதேவேளை
எயார் மொபைல் படையினர் எதிர்தரப்பு பிரிவினராகவும் செயல்பட்டனர். ஏழு
கடற்படை அதிகாரிகள் மற்றும் ஐந்து விமானப்படை அதிகாரிகள் உட்பட 60
அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.
இதன்போது சிரேஷ்ட பாதுகாப்பு படைகளின் அதிகாரிகளும் வருகை
தந்திருந்தனர்.
தொடர்பான
செய்திகள் >>>
|