“கொழும்பு பாதுகாப்பு மாநாடு – 2017”
வெற்றிகரமாக நிறைவு
[2017/08/30]

இலங்கை இராணுவத்தின்
ஏற்பாட்டில் பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில்
திங்கட்கிழமை (ஆகஸ்ட், 28) நடைபெற்ற “கொழும்பு பாதுகாப்பு மாநாடு-2017”
நேற்று மாலை (ஆகஸ்ட், 29) வெற்றிகரமாக நிறைவு பெற்றது. “வன்முறை மிக்க
தீவிரவாதத்தை எதிர்கொள்ளுதல்: உலகளாவிய போக்குகள்” எனும் தொனிப்பொருளில்
இரண்டு நாட்கள் நடைபெற்ற ஏழாவது சர்வதேச பாதுகாப்பு மாநாட்டில் இலங்கை
மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த சுமார் 800 க்கும் அதிகமானோர் கலந்து
கொண்டனர்.
முரண்பாடுகள் மற்றும் அதன்
விளைவுகள் குறித்து இலங்கையின் அனுபவம் தொடர்பாக வெளிவிவகார அமைச்சின்
செயலாளர் திரு பிரசாத் காரியவசம் அவர்கள் இந்நிகழ்வில் உரைநிகழ்த்தியதுடன்,
வன்முறை தீவிரவாதம் மற்றும் பயங்கரவாத அமைப்புக்களுக்கு எதிராக உலகளாவிய
ரீதியில் எப்போதும் விழிப்புடன் இருக்க வேண்டும் என்றும் அவர்
வலியுறுத்தினார். மேலும், கருத்தரங்கின் போது பரிமாற்றப்பட்ட கருத்துக்கள்
தொடர்ந்தும் நிலைநாட்டப்படுவதுடன், சமூகங்கள், அமைப்புக்கள், மற்றும்
நாடுகளுக்கிடையே இதனை அமுல்படுத்துவதில் உள்ள சிக்கல்களை இலகுவனமுரையில்
கையாளப்பட வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
இரண்டு நாட்கள் நடைபெற்ற
குறித்த மாநாட்டின் ஆரம்பநிகழ்வில் (ஆகஸ்ட், 28) ஜனாதிபதி கௌரவ மைத்திரிபால
சிறிசேன அவர்கள் பிரதம அத்தியாக கலந்து சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, இம்மாநாட்டுக்கு 2011ஆம் ஆண்டு தொடக்கம் இன்றுவரை 60 நாடுகளில்
இருந்து சுமார் 160 க்கும் அதிகமான புகழ்பெற்ற புத்திஜீவிகள்
கலந்துகொண்டுள்ளதுடன், தேசிய, பிராந்திய பாதுகாப்பு தொடர்பாக
கலந்துரையாடப்படும் மிக முக்கியதத்துவம் வாய்ந்த மாநாடாக சர்வதேச ரீதியில்
அங்கீகாரம் பெற்றுவிளங்குகின்றது. ஆரம்பத்தில் “பாதுகாப்பு கருத்தரங்கு”
எனும் தலைப்பில் இடம்பெற்ற இந்நிகழ்வு 2016ஆம் ஆண்டிலிருந்து பெயர் மாற்றம்
பெற்று “கொழும்பு பாதுகாப்பு மாநாடு“ எனும் தலைப்பில் இம்மாநாடு இடம்பெற்று
வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இம்மாநாட்டின் இறுதி
நிகழ்வானது இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனநாயக்க அவர்களின்
தலைமையில் இடம்பெற்றதுடன், கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் ட்ரவிஸ் சின்னய்யா,
படைகளின் பிரதானி மேஜர் ஜெனரல் அமால் கருனாசெகர, மற்றும் சிரேஷ்ட இராணுவ
அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
|