››› முன்பக்கம்    

+ பெரிதாக்க | - சிறிதாக்க  பிரசுரிப்பு | உங்கள் கருத்து

2017 ஆம் ஆண்டிற்கான 'நீர்க்காக கூட்டு பயிற்சி' நடவடிக்கை ஆரம்பம்

2017 ஆம் ஆண்டிற்கான 'நீர்க்காக கூட்டு பயிற்சி' நடவடிக்கை ஆரம்பம்

[2017/09/04]

இலங்கை இராணுவத்தினரால் தொடர்ச்சியாக 8வது முறையாகவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள வருடாந்த கள முனை போர் பயிற்சியான 'நீர்க்காக கூட்டு பயிற்சி VIII - 2017' மின்னேரியா காலாட்படை பயிற்சி நிலையத்தில் நேற்று (செப்டெம்பர், 03) ஆரம்பமானதாக இராணுவத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இக்கள முனை போர் பயிற்சியில் 370 கடற்படை 197 விமானப்படை, இயந்திரமய காலாட்படை பிரிவு மற்றும், விஷேட படையினர் மாறும் கொமாண்டோ படையினர் உட்பட 2108 இராணுவ வீரர்கள் கலந்துகொள்ள உள்ளனர். அத்துடன் பங்களாதேஷ், இந்தியா, மாலைதீவு,

நேபாளம், பாக்கிஸ்தான், இந்தோனேசியா, மலேசியா, சீனா, ரஷ்யா, அமெரிக்கா, பிரேசில், சூடான், ஈராக், இஸ்ரேல், ஓமான், துருக்கி, ஈரான் மற்றும் கென்யா ஆகிய நாடுகளில் இருந்து 69 வெளிநாட்டு இராணுவ வீரர்களும் இப் பயிற்சியில் பங்கேற்பர்.

கடந்த மாலை மின்னேரியா பயிற்சி நடவடிக்கைகள் தலைமையகத்தில் அறிமுக நிகழ்வு இடம்பெற்றது. இராணுவத்தின் இளம் படை அதிகாரிகளின் முடிவெடுக்கும் திறன்களை மேம்படுத்துவதற்கான முயற்சியாகவும் அரச சார்பற்ற அமைப்பாளர்கள், வான் மற்றும் கடல் நடவடிக்கைகள், இணைய வழி தாக்குதல்கள் மற்றும் அச்சுறுத்தல்கள் என்பவற்றை எதிர்கொள்ளத்தக்க வகையிலும் இப்பயிற்சி நடவடிக்கைகள் வடிவமைக்கப்பட்டுள்ளது.

அத்துடன் இக்கள முனை போர் பயிற்சியானது செப்டம்பர் 24 ஆம் திகதி நிறைவு பெறவுள்ளது. 

     
     

தொடர்பான செயதிகள் >>

2017 ஆம் ஆண்டிற்கான 'நீர்க்காக கூட்டு பயிற்சி' நடவடிக்கை செப்டம்பரில் ஆரம்பம்

“நீர்க்காக தாக்குதல் பயிற்சி VIII–2017” செப்டெம்பரில் ஆரம்பம்

“நீர்க்காக தாக்குதல் பயிற்சி – VII” சான்றிதழ் வழங்கும் வைபவம் நடைபெற்றது

நீர்க்காக தாக்குதல் பயிற்சி - VII வெற்றிகரமாக நிறைவு

நீர்க்காக தாக்குதல் பயிற்சி 2016 இறுதிகட்ட நடவடிக்கைகளுக்கு தயார

‘நீர்க்காக தாக்குதல் - VII’ பயிற்சி

‘நீர்க்காக தாக்குதல் - VII’ பயிற்சி ஆரம்பம்

‘நீர்க்காக தாக்குதல் - VII’ பயிற்சி செப்டெம்பரில் ஆரம்பமசெய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது

© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்

உங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்