››› முன்பக்கம்    

+ பெரிதாக்க | - சிறிதாக்க  பிரசுரிப்பு | உங்கள் கருத்து

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் கடற்படையின் மனிதாபிமான உதவிகள் தொடர்கிறது

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் கடற்படையின் மனிதாபிமான உதவிகள் தொடர்கிறது

[2017/05/31]

கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழை காரணமாக பாதிக்கப்பட்ட மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு இடமாற்றும் செயற்பாடுகளில் இலங்கை கடற்படை வீரர்கள் ஈடுபட்டுவருவதுடன் பாதிக்கப்பட்ட மக்களுக்கான உணவு மற்றும் அவசியமான மருத்துவ வசதிகளை வழங்கி வருவதாகவும் கடற்படை தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும், இரத்னபுரி, பதுரேலிய மற்றும் வத்தேகம ஆகிய பிரதேசங்களில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு சுத்தமான குடிநீரினை வழங்கும் வகையில் மூன்று நடமாடும் நீர் சுத்திகரிப்பு நிலையங்களை கடற்படையின் ஆய்வு மற்றும் அபிவிருத்திக்குமான பிரிவு நிறுவியுள்ளது. இதன்மூலம் நாளொன்றுக்கு சுமார் 5000 லீட்டர் சுத்தமான குடிநீரினைப் பெற்றுக்கொள்ளமுடியும்.

இதேவேளை, வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மாத்தறை, காலி, இரத்னபுரி மற்றும் களுத்துறை மாவட்டங்களில் அசுத்தமடைந்துள்ள சுமார் 276 கிணறுகளை சுத்தப்படுத்தும் நடவடிக்கைகளிலும் கடற்படையினர் ஈடுபட்டனர். அத்துடன் இலங்கைக்கு வருகை தந்துள்ள இந்தியா, பாக்கிஸ்தான் நாடுகளின் மருத்துவ குழுக்களுடன் இணைந்து இடம்பெயர்ந்துள்ள 1,765 பேருக்கான மருத்துவ உதவிகளையும் இலங்கை கடற்படையினர் வழங்கி வருகின்றனர். இம்மருத்துவ முகாம்கள் மாத்தறை, உடுகம, கலபத்த, புலத்சிங்கள, நாகொட மற்றும் எல்பிட்டிய ஆகிய இடங்களில் இடம்பெற்றது.

இதுவரை வெள்ளத்தினால் பாதிக்கபட்ட 9571 பேர்களை இலங்கை கடற்படையின் மீட்புப் பணிக்குழு பாதுகாப்பான இடங்களுக்கு இடமாற்றியுள்ளதுடன் 194,800ற்கும் அதிகமான உணவுப்பொதிகளையும் பாதிக்கப்பட்ட மக்கள் மத்தியல் விநியோகித்துள்ளது.

     
     
     

கொஸ்கம தொடர்பான செய்திகள் >>>

விமானப்படை வெள்ள அனர்த்தத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு தொடர்ந்தும் உதவி

இராணுவத்தினரின் பாரிய முயற்சியினால் வீதித்தடைகள் அகற்றப்பட்டன

பாகிஸ்தான் கடற்படைக் கப்பல் “சுல்பிகார்” நிவாரணப் பொருட்களுடன் கொழும்பு வருகை

மூன்றாவது இந்திய கப்பல் “ஜலஷ்வா” நிவாரண பொருட்களுடன் கொழும்பு வருக

வெள்ள நிவாரணப்பணிகளில் அர்பணிப்புடன் செயல்படும் முப்படை மற்றும் பொலிசாருக்கு பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பாராட்ட

இலங்கை விமானப்படையினர் தொடர்ந்தும் நிவாரண நடவடிக்கைகளில்

இராணுவத்தினரால் மேலும் வெள்ள நிவாரண உதவிகள்

வெள்ள அனர்த்த பகுதிகளில் மீட்பு மற்றும் நிவாரணப்பணிகள் கடற்படையினரால் முன்னெடுப்பு

மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளில் தொடர்ந்தும் இலங்கை இராணுவத்தினர

வெள்ள நிவாரண உதவி நிமித்தம் இரண்டாவது இந்திய கடற்படை கப்பல் “ஷர்துல்” வருக

இலங்கை விமானப்படை வெள்ள அனர்த்தத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி

வாக்வெள்ள பாலத்தில் குவிந்து காணப்படும் குப்பைகளை அகற்ற கடற்படையினர் உதவி

இராணுவம் தொடர்ந்தும் அனர்த்த மீட்பு பணிகளில

வெள்ள நிவாரண நடவடிக்கைகளுக்கு கடற்படையின் உதவி

நிவாரண உதவிகளுடன் இந்திய கடற்படை கப்பல் “கிரிச்” இலங்கை வருக

இராணுவம் ,கடற்படை மற்றும், விமானப்படை வீரர்கள் இணைந்து அனர்த்த பணிகளில் ஈடுபட்டுள்ளனர்

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களை மீட்கும் மற்றும் நிவாரணம் வழங்கும் பணிகளில் முப்படையினர்செய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது

© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்

உங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்