››› முன்பக்கம்    

+ பெரிதாக்க | - சிறிதாக்க  பிரசுரிப்பு | உங்கள் கருத்து

கொஸ்கம மாணவர்களுக்கு புத்தகங்கள் மற்றும் தைக்கப்பட்ட பாடசாலை சீருடைகள் ஆகியன இராணுவத்தினரால் நன்கொடை

கொஸ்கம மாணவர்களுக்கு புத்தகங்கள் மற்றும் தைக்கப்பட்ட பாடசாலை சீருடைகள் ஆகியன இராணுவத்தினரால் நன்கொடை

[2016/06/13]

கொஸ்கம சாலாவ பகுதியில் மீள்கட்டுமான மற்றும் நிவாரண நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் இராணுவத்தினரால், பாதிக்கப்பட்ட 1349 மாணவர்களுக்கான பயிற்சி புத்தகங்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு இன்று (ஜூன், 13) கலோக்கல புனித ஜோன் போஸ்கோ வித்தியாலயாத்தில் இடம்பெற்றது.

இந்நிகழ்வின் போது 126 மாணவர்கள் பயிற்சி புத்தகங்களைப் பெற்றுக்கொண்டதுடன் எஞ்சிய 1223 மாணவர்களுக்கான பயிற்சி புத்தகங்கள் பாடவேளைகளின் போது வளங்கிகிவைக்கப்படவுள்ளது. இப்பயிற்சி புத்தக விநியோகம் தரம் 1-5, தரம் 6-9 மற்றும் தரம் 10-13 என 3 பிரிவுகளாக வகைப்படுத்தப்பட்டிருந்தது.

இதேவேளை, பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு புதிய பாடசாலை சீருடைகளை இலவசமாக தைத்துக்கொடுப்பதற்கான விசேட திட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டதுடன் இச்சீருடைகள் இராணுவத்தின் ரணவிரு ஆடைத் தொழிலகத்தினால் தைத்துக் கொடுக்கப்படவுள்ளன.

இராணுவ தளபதியை பிரதிநிதித்துவப்படுத்தி இலங்கை இராணுவத்தின் தொண்டர் படை கொமடான்ட் மேஜர் ஜெனரல் சன்ன குணதிலக்க அவர்கள் அங்குரார்பன நிகழ்வில் கலந்துகொண்டதுடன் சீதாவாக பிரதேச செயலாளர், ஹோமாகம வலயக் கல்விப் பணிப்பாளர், மேற்கு பாதுகாப்பு படைகளின் கட்டளைத் தளபதி, அதிபர்கள், ஆசிரியர்கள் உள்ளிட்ட அரச அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

 

கொஸ்கம தொடர்பான செய்திகள் >>>

 

கொஸ்கம பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு பாதுகாப்பு செயலாளர் விஜயம

 

கொஸ்கமவில் பாதிக்கப்பட்ட 51 வீடுகளின் திருத்தப் பணிகள் பூர்த்தி –
இராணுவம

 

பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கொஸ்கம பிரதேசத்திற்கு மீண்டும்
விஜயம

 

கொஸ்கமவில் சீரமைப்பு பணிகளை நிறைவுசெய்ய இராணுவம் உறுதி

 

கொஸ்கம- சலாவ வெடிவிபத்து தொடர்பாக ஆராய வெவ்வேறான
விசாரணைகள்

 

கொஸ்கம மீள் கட்டுமானப் பணிகளில் இராணுவம

 

மூடப்பட்ட ஹைலெவல் வீதி மீண்டும் மக்கள் பாவனைக்காக திறப்ப

 

பாரிய சுகாதார பிரச்சினைகள் இல்லை

 

கொஸ்கம சாலாவ இராணுவ முகாமில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக
பாதிக்கப்பட்ட வீடுகள் இராணுவத்தினரால் மீள புனரமைக்கப்படும

 

ஊடக அறிக்கை

 

பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கொஸ்கமவிற்கு விஜயம

 

கொஸ்கம முகாமின் ஆயுதக் கிடங்கில் ஏற்பட்ட தீயை கட்டுப்படுத்த
நடவடிக்கை



செய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது

© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்

உங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்