››› முன்பக்கம்    

+ பெரிதாக்க | - சிறிதாக்க  பிரசுரிப்பு | உங்கள் கருத்து

பொதுமண்ணிப்பு காலப்பகுதியில் 11,200 இராணுவ வீரர்கள் சட்டரீதியான சேவைவிலக்குப் பெற விண்ணப்பம்

பொதுமண்ணிப்பு காலப்பகுதியில் 11,200 இராணுவ வீரர்கள் சட்டரீதியான சேவைவிலக்குப் பெற விண்ணப்பம்

[2017/11/23]

சட்டரீதியாக சேவைவிலக்கு பெற்றுக் கொள்வதற்காக வழங்கப்பட்ட பொதுமண்ணிப்பு காலம் இம்மாதம் மாதம் 22ஆம்திகதி நள்ளிரவுடன் முடிவடைந்தது. குறித்த பொதுமன்னிப்பு காலத்தைப் பயன்படுத்தி இலங்கை இராணுவத்திலிருந்து சட்டவிரோதமாக தப்பிச்சென்ற 15 அதிகாரிகள், 09 பயிலுனர் அதிகாரிகள் மற்றும் 11,208 இராணுவ சிப்பாய்கள் உள்ளிட்ட 11,232 இராணுவ வீரர்கள் சட்டரீதியான சேவைவிலக்கு பெற்றுக் கொள்வதற்காக தமது படைத்தலைமையகங்களுக்கு சமூகமளித்தனர்.

உத்தியோக பூர்வ விடுமுறையின்றி கடமைக்கு சமூகமளிக்காத இராணுவ வீரர்கள், சட்டரீதியான சேவைவிலக்கு பெற்றுக் கொள்வதற்காக
ஒக்டோபர் மாதம் 23ம் திகதி முதல் நவம்பர் மாதம் 22ம் திகதி வரையிலான ஒரு மாத கால பொதுமன்னிப்பு காலம் அமுல்படுத்தப்பட்டது.

முதலில் பொதுமண்ணிப்புக் காலம் 15 ஆம் திகதி (நவம்பர்) முடிவடையும் என திட்டமிடப்பட்டிருந்தது, எனினும் இராணுவத்திற்கு கிடைக்கப்பெற்ற ஏராளமான கோரிக்கைகளுக்கு அமைவாக குறித்த காலப்பகுதி நவம்பர் மாதம் 22ம் திகதி வரை நீட்டிக்கப்பட்டது.

குறித்த காலப் பகுதியை பயன்படுத்தி சட்ட ரீதியாக விலகிச் செல்லாதவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதுடன் அவர்களை கைது செய்வதற்கான நடவடிக்கைகளும் ஆரம்பிக்கப்படவுள்ளது

சட்டவிரோதமாக தப்பிச்சென்ற வீரர்களுக்கு வேலைவாய்ப்பை வழங்குதல், அவர்கள் மறைத்து வைத்திருத்தல் என்பன நாட்டின் சட்டத்தை மீறும் செயல் என்பதுடன் அது குற்றவியல் தண்டனையின் 133 வது பிரிவின் படி தண்டனைக்குரிய குற்றமாகும்.

அனுமதியின்றி நீண்டகால விடுமுறையிலிருந்து கடமைக்கு சமூகமளிக்காத முப்படை வீரர்களுக்கு சட்டரீதியாக கடமையிலிருந்து விலகுவதற்காக கடந்த ஆண்டு பாதுகாப்பு அமைச்சினால் இரு முறைகள் பொதுமன்னிப்புக்காலம் அறிவிக்கப்பட்டு கால அவகாசம் வழங்கப்பட்டது. அவ்வாண்டு அறிவிக்கப்பட்ட பொதுமன்னிப்பு காலத்தைப் பயன்படுத்தி சட்டரீதியாக விலகிச் செல்லாத ஒன்பது படைஅதிகாரிகள் மற்றும் 5641 படைவீரர்கள் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

தொடர்பான செய்திகள் >>

2017ஆம் ஆண்டுக்கான இராணுவத்தின் பரா விளையாட்டுப்போட்டிகள் அடுத்த வாரம் ஆரம்பம்

இராணுவத்திலிருந்து சட்டபூர்வமாக விலகிச் செல்வதற்கான பொதுமண்ணிப்பு காலம் அறிவிப்பு

முப்படையிலிருந்து தப்பிச்சென்ற படைவீரர்கள் 777 பேர் ஒரே நாளில் கைது

முப்படையிலிருந்து தப்பிச்சென்ற மேலும் பலர் கைது

முப்படைகளிலிருந்து தப்பிச் சென்ற வீரர்கள் நான்காயிரத்துக்கும் மேற்பட்டோர் கைது

முப்படையிலிருந்து தப்பிச்சென்ற மேலும் பலர் கைது

முப்படையிலிருந்து தப்பிச்சென்ற 1200 பேர் கைது

முப்படையிலிருந்து தப்பிச்சென்ற 450 பேர் கைது

முப்படையிலிருந்து தப்பிச்சென்ற மேலும் பலர் கைது

பொது மன்னிப்பு காலம் இன்றுடன் நிறைவு

பொது மன்னிப்பு கால எல்லைக்குள் முப்படைகளிலிருந்து தப்பிச் சென்ற மேலும் பலர் சட்ட ரீதியாக விலக முறையீட

பொதுமன்னிப்பு காலம் சாதகமான நிலையில்

முப்படைகளிலிருந்து தப்பிச் சென்றவர்களுக்கான பொதுமன்னிப்புக் காலம் அறிவிப்பு

இராணுவத்திலிருந்த தப்பியோருக்கு பொது மன்னிப்பு



செய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது

© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்

உங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்