மின்அஞ்ஞல் பிரசுரிப்பு உங்கள் கருத்து

යාවත්කාලීන වේලාව: 6/2/2017 9:07:54 AM இராணுவத்தினர் தொடர்ந்தும் நிவாரணப்பணிகளில்

இராணுவத்தினர் தொடர்ந்தும் நிவாரணப்பணிகளில்

[2017/06/01]

இலங்கை இராணுவத்தின் மேற்கு பாதுகாப்பு படைத் தலைமையக, 14 ஆவது மற்றும் 58 ஆவது வப்படைப் பிரிவுகள் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட களுத்தறை, காலி மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களில் தொடர்ந்தும் அனர்த்த நிவாரணப்பணிகளை மேற்கொண்டு வருவதாக இராணுவத்தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறித்த பணிகளை மேற்கொள்ள 23 படகுகள், 63 கனரக வாகனங்கள் 13 பீ.டி.ஆர் மற்றும் 18 WMZ மீட்பு வாகனங்கள், 18 பவல் வாகனங்கள் 12 ஐயன்கோஸ் வாகனங்கள் ஆகியவற்றை பயன்படுத்தி பாதிக்கப்பட்ட பகுதிகளில் அனர்த்த நிவாரணப்பணிகளை மேற்கொண்டுவருகின்றனர்.

இதேவேளை, இராணுவத்தினர் தொடர்ந்தும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில் வீடுகள் மற்றும் வீதிகளை சுத்தம் செய்துவருவதுடன், உயிர்காப்பு நடவடிக்கைகள், நிவாரண உதவிகள், பாதிக்கப்பட்டவர்களை பாதுகாப்பான இடங்களுக்கு நகர்த்துதல், கிணறுகளை சுத்திகரித்தல், கங்கைகளின் அணைக்கட்டுகளில் ஏற்பட்ட வெடிப்புகளை தடுத்தல் ஆகிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும், பாதுகாப்பு படைகளின் பிரதானி அலுவலகத்தினால் 31 ஆம் திகதி மாலை வரை கடந்த 24 மணித்தியாலங்களுக்குள் 46000 உணவு பார்சல்கள், 4995கி.கி உலருணவு, 6370 குடிநீர் போத்தல்கள், 1200 கி.கி மருத்துவபொருட்கள் மற்றும் 27 பாய்கள் என்பன பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டது. அத்துடன் இராணுவத்தினரால் இன்று 10000 உணவு பார்சல்கள் மற்றும் 1500 தண்ணீர் போத்தல்கள் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

     
     
     

தொடர்பான செய்திகள் >>>

நிவாரணப் பொருட்களுடன் மூன்று சீன இராணுவ கடற்படைக் கப்பல்கள் இலங்கை வருகை

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் கடற்படையின் மனிதாபிமான உதவிகள் தொடர்கிறது

விமானப்படை வெள்ள அனர்த்தத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு தொடர்ந்தும் உதவி

இராணுவத்தினரின் பாரிய முயற்சியினால் வீதித்தடைகள் அகற்றப்பட்டன

பாகிஸ்தான் கடற்படைக் கப்பல் “சுல்பிகார்” நிவாரணப் பொருட்களுடன் கொழும்பு வருகை

மூன்றாவது இந்திய கப்பல் “ஜலஷ்வா” நிவாரண பொருட்களுடன் கொழும்பு வருக

வெள்ள நிவாரணப்பணிகளில் அர்பணிப்புடன் செயல்படும் முப்படை மற்றும் பொலிசாருக்கு பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பாராட்ட

இலங்கை விமானப்படையினர் தொடர்ந்தும் நிவாரண நடவடிக்கைகளில்

இராணுவத்தினரால் மேலும் வெள்ள நிவாரண உதவிகள்

வெள்ள அனர்த்த பகுதிகளில் மீட்பு மற்றும் நிவாரணப்பணிகள் கடற்படையினரால் முன்னெடுப்பு

மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளில் தொடர்ந்தும் இலங்கை இராணுவத்தினர

வெள்ள நிவாரண உதவி நிமித்தம் இரண்டாவது இந்திய கடற்படை கப்பல் “ஷர்துல்” வருக

இலங்கை விமானப்படை வெள்ள அனர்த்தத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி

வாக்வெள்ள பாலத்தில் குவிந்து காணப்படும் குப்பைகளை அகற்ற கடற்படையினர் உதவி

இராணுவம் தொடர்ந்தும் அனர்த்த மீட்பு பணிகளில

வெள்ள நிவாரண நடவடிக்கைகளுக்கு கடற்படையின் உதவி

நிவாரண உதவிகளுடன் இந்திய கடற்படை கப்பல் “கிரிச்” இலங்கை வருக

இராணுவம் ,கடற்படை மற்றும், விமானப்படை வீரர்கள் இணைந்து அனர்த்த பணிகளில் ஈடுபட்டுள்ளனர்

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களை மீட்கும் மற்றும் நிவாரணம் வழங்கும் பணிகளில் முப்படையினர்


செய்திகளில் அடங்கியுள்ள அடிப்டைக் கருத்துக்ளை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்ட்டுள்ளது.

© 2008 பாதுகாப்பு ,பொதுமக்கள் பாதுகாப்பு,சட்டமும் ஒழுங்கும் பற்றிய அமைச்சுககே உரிமை உடயதாகும்

உங்கள் என்னங்களும் கருத்துக்களும : சர்வதேச பதிப்பாசிரியர்