››› முன்பக்கம்    

+ பெரிதாக்க | - சிறிதாக்க  பிரசுரிப்பு | உங்கள் கருத்து

வெடித்த மற்றும் வெடிக்கா பொருட்கள் தொடர்பாக மாணவர்களுக்கு விழிப்புணர்வூட்டும் நிகழ்வில் இராணுவத்தினர்

வெடித்த மற்றும் வெடிக்கா பொருட்கள் தொடர்பாக மாணவர்களுக்கு விழிப்புணர்வூட்டும் நிகழ்வில் இராணுவத்தினர்

[2016/06/14]

இராணுவத்தினரின் சாலாவ ஆயுத களஞ்சிய சாலையில் இடம்பெற்ற வெடிப்பு சம்பவத்தின் பின்னர் அப்பகுதியில் சுத்தப்படுத்தல் மற்றும் மீள்கட்டுமானப் பணிகள் என்பனவற்றில் ஈடுபட்டுவருகின்ற அதேவேளை கொஸ்கம பகுதியில் உள்ள பாடசாலை மாணவர்களுக்கு வெடித்த மற்றும் வெடிக்கா பொருட்கள் தொடர்பாக விழிப்புணர்வூட்டும் நிகழ்வுகளில் இராணுவத்தினர் ஈடுபட்டுவருகின்றனர்.

இலங்கை இராணுவத்தின் பொறியியல் படையணியினரால் மேற்கொள்ளப்பட்ட விழிப்புணர்வுச் செயலமர்வுகளில் சுமேத மகா வித்தியாலயம், புவக்பிட்டிய தமிழ் மகா வித்தியாலயம் மற்றும் கலோக்கல புனித யோவான் வித்தியாலயம் உள்ளிட்ட பாடசாலைகளின் மாணவர்கள், ஆசிரியர்கள், அதிபர்கள் ஆகியோர் கலந்து கொண்டதாக இராணுவ தகவல்கள் தெரிவிக்கின்றன.

இவ் விழிப்புணர்வுச் செயலமர்வுகளில் விரிவுரைகள், ஒத்திகைகள், செயல்பாட்டு அமர்வுகள் ஆகியன இடம்பெற்றதுடன் இவ்வாறான வேளைகளில் எடுக்கப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை முறைகள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டன. இதேவேளை கடந்தவாரம் இடம்பெற்ற சாலாவ ஆயுத களஞ்சிய சாலையில் இடம்பெற்ற வெடிப்பு சம்பவத்தின் பின்னர் அப்பகுதியில் சிதறிக்கிடக்கும் வெடித்த மற்றும் வெடிக்கா பொருட்களை அகற்றும் நடவடிக்கைகளில் படையினர் ஈடுபட்டுள்ளனர்.

இவ்வாறு சிதறிக்கிடக்கும் பொருட்களை ஞாபகார்த்தப் பொருட்களாக சேகரித்து வைக்கும் மனப்பாங்கு பொதுமக்களிடையே நிலவுகிறது. பொது மக்களுக்கு சேதம் விளைவிக்கும் இவ்வாறான வெடிபொருட் பாகங்களை சேகரிப்பது தடை செய்யப் பட்டுள்ளதுடன் இது தொடர்பாக எச்சரிக்கைகளும் விடுக்கப்பட்டுள்ளன. இவ்வாறான வெடிபொருட் பாகங்கள் காணப்படுமிடத்து அவற்றினை பாதுகாப்பாக அகற்றுவதற்கு சம்பத்தப்பட்ட திணைக்களங்களுக்கு அறியத்தருமாறு பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

கொஸ்கம சம்பவம் தொடர்பாக அறியத்தர 011 2434 251, 011 3818 609 இலக்கங்களுடன் தொடர்பு கொள்ளவும்

கொஸ்கம தொடர்பான செய்திகள் >>>

 

கொஸ்கம அரச வைத்தியசாலை புனரமைப்பிற்கு கடற்படையினர் உதவி

 

கொஸ்கம மாணவர்களுக்கு புத்தகங்கள் மற்றும் தைக்கப்பட்ட பாடசாலை சீருடைகள் ஆகியன இராணுவத்தினரால் நன்கொட

 

கொஸ்கம பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு பாதுகாப்பு செயலாளர் விஜயம

 

கொஸ்கமவில் பாதிக்கப்பட்ட 51 வீடுகளின் திருத்தப் பணிகள் பூர்த்தி –
இராணுவம

 

பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கொஸ்கம பிரதேசத்திற்கு மீண்டும்
விஜயம

 

கொஸ்கமவில் சீரமைப்பு பணிகளை நிறைவுசெய்ய இராணுவம் உறுதி

 

கொஸ்கம- சலாவ வெடிவிபத்து தொடர்பாக ஆராய வெவ்வேறான
விசாரணைகள்

 

கொஸ்கம மீள் கட்டுமானப் பணிகளில் இராணுவம

 

மூடப்பட்ட ஹைலெவல் வீதி மீண்டும் மக்கள் பாவனைக்காக திறப்ப

 

பாரிய சுகாதார பிரச்சினைகள் இல்லை

 

கொஸ்கம சாலாவ இராணுவ முகாமில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக
பாதிக்கப்பட்ட வீடுகள் இராணுவத்தினரால் மீள புனரமைக்கப்படும

 

ஊடக அறிக்கை

 

பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கொஸ்கமவிற்கு விஜயம

 

கொஸ்கம முகாமின் ஆயுதக் கிடங்கில் ஏற்பட்ட தீயை கட்டுப்படுத்த
நடவடிக்கை



செய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது

© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்

உங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்