››› முன்பக்கம்    

+ பெரிதாக்க | - சிறிதாக்க  பிரசுரிப்பு | உங்கள் கருத்து

கொஸ்கமவில் இராணுவத்தினரினால் மேற்கொள்ளப்பட்டுவந்த மீள்கட்டுமானப் பணிகள் பூர்த்தியாகும் நிலையில்

கொஸ்கமவில் இராணுவத்தினரினால் மேற்கொள்ளப்பட்டுவந்த மீள்கட்டுமானப் பணிகள் பூர்த்தியாகும் நிலையில்

[2016/06/23]

இராணுவத்தினரின் கொஸ்கம ஆயுத களஞ்சிய சாலையில் இடம்பெற்ற வெடிப்புச் சம்பவத்தின் காரணமாக பாதிக்கப்பட்ட கட்டிடங்களின் மீள்கட்டுமானப் பணிகள் தொடர்கின்றன. இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்டுவரும் இம் மீள்கட்டுமானப் பணிகளின் மூலமாக பகுதியளவில் சேதத்திற்குள்ளான வீடுகள் பலவற்றின் திருத்த வேலைகள் நிறைவு செய்யப்பட்டு அவற்றின் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. மேலும் இப்பகுதிகளில் சிதறிக் காணப்பட்ட வெடிபொருட் சிதைவுகளை அகற்றுதல் மற்றும் நீர்நிலைகளை சுத்தப்படுத்தல் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஆகியன பாதுகாப்பு படையினரால் முன்னெடுக்கப்பட்டது.

அத்துடன் பகுதியளவில் சேதமடைந்த சுமார் 450 வீடுகள் முழுமையாக புனரமைக்கப்பட்டு உரிமையாளகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள அதேவேளை, சுமார் 70 வீடுகளின் திருத்த வேலைகள் தற்போது இடம்பெற்று வருகின்றது. மேலும் சாலவ இராணுவ முகாமைச் சூழவுள்ள பகுதிகளில் சிதறிக் காணப்பட்ட வெடித்த மற்றும் வெடிக்கா வெடிபொருட் சிதைவுகள் யாவும் முழுமையாக அகற்றப்பட்டுள்ள நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அப்பகுதியில் மேலும் பல தேடுதல் நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. மேற்படி விடயம் தொடர்பாக கருத்து வெளியிட்ட இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ஜெயநாத் ஜயவீர, இவ்வாறான வெடித்த மற்றும் வெடிக்க பொருட்கள் தமது சுற்றயலில் காணப்படுமிடத்து அவற்றினை பாதுகாப்பாக செயலிழக்க செய்வதற்காக அது தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தெரியப்படுத்துமாறும் இவ்வகையான வெடிபொருட்களை பொதுமக்கள் சிலர் நினைவுச்சின்னங்களாக வைத்திருப்பது அவதானிக்கப்பட்டுள்ளதாகவும் ஆனால் உண்மையில் அவைகள் ஆபத்து நிறைந்தவையாக உள்ளதுடன் அவற்றை வைத்திருப்பதானது சட்டவிரோதமான செயல்கள் ஆகும் எனவும் வலியுறுத்தினார்.

இதற்கு மேலதிகமாக முழுமையாக பாதிக்கப்பட்ட கட்டிடங்களின் மீள்கட்டுமான வேலைகள் தொடங்கப்பட்டுள்ளதுடன் பாதிக்கப்பட்ட மக்களுக்கான இழப்பீடுகள் வழங்குதல் உள்ளிட்ட சமூக நலன்புரி மற்றும் நிவாரண நடவடிக்கைகளை பல அரச அதிகாரிகளினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

கொஸ்கம தொடர்பான செய்திகள் >>>

 

வெடித்த மற்றும் வெடிக்கா பொருட்கள் தொடர்பாக மாணவர்களுக்கு விழிப்புணர்வூட்டும் நிகழ்வில் இராணுவத்தினர்

 

கொஸ்கம அரச வைத்தியசாலை புனரமைப்பிற்கு கடற்படையினர் உதவி

 

கொஸ்கம மாணவர்களுக்கு புத்தகங்கள் மற்றும் தைக்கப்பட்ட பாடசாலை சீருடைகள் ஆகியன இராணுவத்தினரால் நன்கொட

 

கொஸ்கம பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு பாதுகாப்பு செயலாளர் விஜயம

 

கொஸ்கமவில் பாதிக்கப்பட்ட 51 வீடுகளின் திருத்தப் பணிகள் பூர்த்தி –
இராணுவம

 

பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கொஸ்கம பிரதேசத்திற்கு மீண்டும்
விஜயம

 

கொஸ்கமவில் சீரமைப்பு பணிகளை நிறைவுசெய்ய இராணுவம் உறுதி

 

கொஸ்கம- சலாவ வெடிவிபத்து தொடர்பாக ஆராய வெவ்வேறான
விசாரணைகள்

 

கொஸ்கம மீள் கட்டுமானப் பணிகளில் இராணுவம

 

மூடப்பட்ட ஹைலெவல் வீதி மீண்டும் மக்கள் பாவனைக்காக திறப்ப

 

பாரிய சுகாதார பிரச்சினைகள் இல்லை

 

கொஸ்கம சாலாவ இராணுவ முகாமில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக

 
பாதிக்கப்பட்ட வீடுகள் இராணுவத்தினரால் மீள புனரமைக்கப்படும

 

ஊடக அறிக்கை

 

பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கொஸ்கமவிற்கு விஜயம

 

கொஸ்கம முகாமின் ஆயுதக் கிடங்கில் ஏற்பட்ட தீயை கட்டுப்படுத்த
நடவடிக்க


 



செய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது

© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்

உங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்