பத்தரமுல்லையில் புதிய அலுவலக கட்டிடத்தொகுயை ஜனாதிபதி திறந்துவைத்தார்
[2012/05/18]
 பத்தரமுல்லை செத்சிறிபாயவில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட
அலுவலகக் கட்டிடத்தொகுதியை அதிமேதகு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் இன்று
(மே-18) திறந்துவைத்தார்.
அங்கவீனமுற்ற போர்வீரர்களுக்கு வீடுகள் கையளிப்பு
[2012/05/18]
பாதுகாப்பு அமைச்சின் சேவா வனிதா பிரிவினால், யுத்தத்தால்
அங்கவீனமுற்ற போர்வீரர்கள் இருவருக்கு புதிதாக நிர்மாணிக்கப்பட்ட இரண்டு
வீடுகளை கையளிக்கும் வைபவம் நேற்று (மே-17) மஹியங்கனையில் இடம்பெற்றது.
அமைச்சர் பீரிஸ் இன்று அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் கிளின்டனை
சந்திப்பு
[2012/05/18]
நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு வாஷிங்டன் சென்றுருக்கும்
வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ. எல். பீரிஸ் இன்று(மே-18) அமெரிக்க
இராஜாங்கச் செயலாளர் ஹிலாரி கிளின்டனை சந்திக்கின்றார்.
“லங்கா போஸ்ட்” மாதாந்த பத்திரிகை
[2012/05/18]
அண்மையில் நிவ்யோக்கில் சிங்களம்/ஆங்கில மாதாந்த
பத்திரிகையான “லங்கா போஸ்ட்” பத்திரிகை சேவை ஆரம்பிக்கப்பட்டது.
புனர்வாழ்வு பெற்ற முன்னாள் புலி உறுப்பினர்களுக்கு கடனுதவி
[2012/05/18]
புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் புலிகள் இயக்க உறுப்பினர்களுக்கு சுய வேலை
வாய்ப்புகளை ஆரம்பிப்பதற்கு சந்தர்ப்பமளிக்கும் முகமாக அரசாங்கம்
அவர்களுக்கு கடனுதவி வழங்க தீர்மானித்துள்ளதாக புனர்வாழ்வு அதிகார சபையின்
தலைவர் ஈ. ஏ. சமரசிங்க தெரிவித்தார்.
வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்களுக்கு இரட்டை பிரஜா
உரிமை
[2012/05/18]
வெளிநாடுகளில்
வாழும் இலங்கையர்களுக்கு இரட்டை பிரஜா உரிமை வழங்கும் திட்டமொன்றை
ஆரம்பிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக பதில் ஊடகத்துறை அமைச்சர் லக்ஷ்மன்
யாப்பா அபேவர்தன நேற்றுத் தெரிவித்தார்.
அமைச்சர் பீரிஸ் தொடர்ச்சியாக பல சந்திப்புக்களை மேற்கொண்டார்
[2012/05/17]
 நான்கு நாள் உத்தியோக விஜயத்தை மேற்கொண்டு வாஷின்டன் சென்றுள்ள வெளிவிவகார
அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் அவர்கள் இரண்டாவது நாளான புதன்கிழமை
கேபிடல் ஹில்லில் தொடர்ச்சியான பல சந்திப்புக்களில் ஈடுபட்டார்.
மூன்றாவது வெற்றி அணிவகுப்புக்கான ஏற்பாடுகள் பூர்த்தி
[2012/05/17]
 எதிர்வரும் 19 ஆம் திகதி நடைபெறவுள்ள மூன்றாவது
வெற்றிநாள் கொண்டாட்டத்திற்கான சகல எற்பாடுகளும் கொழும்பு காலிமுகத்திடலில்
சிறப்பாக ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளது.
யுத்தவீரருக்கு சேவா வனிதா பிரிவினால் புதிய வீடு
[2012/05/17]
பாதுகாப்பு அமைச்சின் சேவா வனிதா பிரிவினால்
யுத்தவீரரொருவருக்கு புதிதாக நிர்மாணிக்கப்பட்ட வீடு நேற்று(மே-16)
டொடன்டுவ கடுவத்த பிரதேசத்தில் உள்ள உடுமுல்ல பிரதேசத்தில் வைத்து
கையளிக்கப்பட்டது.
பொலிஸ் முறைப்பாட்டுப் பிரதிகளைப் பெற்றுக்கொள்ள மேலும் பல வசதிகள்
அறிமுகம்
[2012/05/16]
மக்களது வசதிகருதி பொலிஸ் முறைப்பாட்டுப் பிரதிகளை உடனடியாக
பெற்றுக்கொள்வதற்கான புதிய நடைமுறையை இலங்கைப் பொலிஸ் பிரிவினர் கடந்த மே 1
ஆம் திகதி முதல் ஆரம்பித்துள்ளனர்.
இலங்கையின் மீள்குடியேற்ற நடவடிக்கைகள் சிறந்த வெற்றியை கண்டுள்ளது -
யூஎஸ்ஏஐடீ பாராட்டு
[2012/05/16]
வடக்கு மற்றும் கிழக்கில் இலங்கை அரசாங்கத்தால் முன்னெடுக்கப்படும்
மீள்குடியேற்ற நடவடிக்கைகள் சிறந்த வெற்றியைக் கண்டுள்ளது என யூஎஸ்ஏஐடீயின்
பிரதிப் பணிப்பாளர் ரெக்கோர் ஹியூபின் தெரிவித்துள்ளார்.
உள்நாட்டில் இடம்பெயர்ந்து மீள்குடியமர்த்தப்பட்டவர்களுக்கு காணி
உறுதிகள்
[2012/05/16]
மீள் குடியமர்த்தப்பட்டுள்ள அனேகமான மக்களுக்கான காணி உறுதிகளை அவர்களுக்கு
வழங்குவதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக பாரம்பரிய கைத்தொழில்கள்
மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா,
சகலவித இனவாதத்தையும் நிராகரிக்கிறோம்
[2012/05/16]
தேசிய ஒற்றுமைக்கு பங்கம் விளைவிக்கக்கூடிய சாதி, மத, பிரதேச பேதங்களை
ஏற்படுத்தும் செய்திகளை ஊடகங்கள் வெளியிடுவதை தவிர்த்துக்கொள்ள வேண்டுமென்று
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்று வேண்டுகோள் விடுத்தார்.
உள்நாட்டுத் தீர்வுகள், இலங்கையின் சமாதானத்தை நிலைத்திருக்கச் செய்யும்
- அமைச்சர் பீரிஸ்
[2012/05/16]
 நான்கு நாள் உத்தியோக விஜயத்தை மேற்கொண்டு வொஷின்டன்
சென்றுள்ள வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் செனட் தலைவர்களை
தொடர்ச்சியாக சந்தித்துவருகின்றார்.
போர்க்கள நிகழ்வுகள் தொடர்பாக எழுதப்பட்ட “கோடாஸ் வோர்” நூல் வெளியீடு
[2012/05/15]
 தமிழீழ
விடுதலைப்புலிப் பயங்கரவாத அமைப்பை நாட்டில் இருந்து முற்றாக அகற்ற
முன்னெடுக்கப்பட்ட போரின் நிகழ்வுகள் தொடர்பாக ஊடகவியலாளர் சீ.ஏ.
சந்திரபிரேமவால் எழுதப்பட்ட “கோடாஸ் வோர்” என்ற நூல் நேற்று (மே-14)
பத்தரமுல்லை வோட்டஸ் ஏஜில் வைத்து வெளியிடப்பட்டது. 
போர்வீரர்களுக்கு வட்டியில்லாக் கடனுதவி
[2012/05/15]
தாய்நாட்டிற்காக அளப்பரிய சேவையாற்றிய முப்படை மற்றும்
பொலிஸ் பிரிவைச் சேர்ந்த அங்கவீனமுற்ற போர்வீரர்களுக்கு அவர்களது நலன்கருதி
பாதுகாப்பு அமைச்சின் சேவா வனிதா பிரிவினால் வட்டியில்லாக் கடனுதவி வழங்கும்
நிகழ்வு இன்று (மே-15) பாதுகாப்பு அமைச்சின் பிரதான கேட்போர்கூடத்தில்
இடம்பெற்றது.
70 மில்லியன் செலவில் யாழ்பாணத்தில் தொடர்மாடி வீடமைப்புத்திட்டம்
புனர்நிர்மாணம்
[2012/05/15]
18 வருடங்கள் பழைமை வாய்ந்த யாழ்பாண குருநகர் பகுதியில்
அமைந்துள்ள தொடர்மாடி வீடமைப்புத் திட்டமானது 70 மில்லியன் செலவில் புனர்
நிர்மாணிக்கப்படவுள்ளது.
உலகில் நலன்புரி செயற்பாடுகளில் முதன்மை வகிக்கும் நாடு இலங்கை
[2012/05/15]
உலகிலேயே நலன்புரி செயற்பாடுகளில் முதன்மை வகிக்கும்
நாடு இலங்கை தான் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் தெரிவித்தார்.
விடுதலைப்புலிகளால் மேற்கொள்ளப்பட்ட ஸ்ரீ மஹா போதி
படுகொலையின் 27 ஆவது ஆண்டு நிறைவு இன்று
[2012/05/14]
விடுதலைப்புலி
பயங்கரவாத அமைப்பால் மேற்கொள்ளப்பட்ட மிக மோசமான படுகொலைகளில் ஒன்றான, 146
பௌத்த பக்தர்களை அவர்களது புனித் தளமான அநுராதபுரத்தில் அமைந்துள்ள ஸ்ரீ மஹா
போதி விகாரையில் வைத்து கொடூரமான முறையில் படுகொலை செய்த சம்பவத்தின் 27
ஆவது ஆண்டுநிறைவு இன்றாகும்.
“கோடாஸ் வோர்” என்ற நூல் வெளியீடு இன்று
[2012/05/14]
மோதலின் போது இடம்பெற்ற நிகழ்வுகளை வெளிச்சமிட்டுக்
காட்டும் “கோடாஸ் வோர்” என்ற நூலின் வெளியீடு, இன்று(மே-14) பத்தரமுல்லை
வோட்டஸ் ஏஜில் இடம்பெறவுள்ளது.

|